இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனை குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. மறுவாய்வு முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் நலன் காக்க தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் தலைமையில் 20 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் தலையிலான குழுவில், ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]