சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பினால் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மா.மதிவேந்தன் சுற்றுலாத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த 7-ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் மா.மதிவேந்தன் பதவியை ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கருக்கு கொரோனா […]