சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று, மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தனி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து வாசித்தார். மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் அரிட்டாபட்டி அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஹிந்துஸ்தான் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின் கருத்துக்களை பரீசலித்து கொண்டு இந்த சுரங்கம் அமைக்கும் […]
சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக நாளை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கர்நாடாக அரசு காவிரியில் இருந்து தினமும் 1 டிஎம்சி அளவில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என காவிரி ஒழுங்கற்று வாரியம் கடந்த வாரம் உத்தரவிட்டது. ஆனால், அதனை ஏற்க மறுத்தது கர்நாடக அரசு . மேலும் ஒருநாளைக்கு 8 ஆயிரம் லிட்டர் தண்ணீர் திறந்து விடுவதாக கூறியது. இதனை அடுத்து, வேலூரில் செய்தியாளர்களை […]
வேலூர்: காவிரி விவகாரம் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறினார். கடந்த வாரம் நடைபெற்று முடிந்த 99வது காவிரி ஒழுங்கற்று குழு ஆலோசனை கூட்டத்தில், கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தினசரி 1 டிஎம்சி தண்ணீர் வீதம் அடுத்த 30 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என்ற பரிந்துரையை (உத்தரவை) முன்வைத்தது. ஆனால் அதனை ஏற்க கர்நாடக அரசு மறுத்துவிட்டது. நேற்று முன்தினம் காவிரி விவகாரம் குறித்து கர்நாடக […]
South Chennai : தென்சென்னையில் தமிழிசை போட்டியிடுவதை கிண்டல் செய்த அமைச்சர் துரைமுருகன். தமிழகத்தில் தென் சென்னை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுக்கிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் முன்னாள் பாஜக தலைவரும், முன்னாள் தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தராஜன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஜெயவர்தன் போட்டியிடுகிறார். கடந்த 2019 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன் தான் வெற்றி பெற்று இருந்தார். கடந்த மக்களவை தேர்தலில் , தூத்துக்குடி தொகுதியில் […]
தமிழக சட்டப்பேரவையில் இன்று இறுதி நாள் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அப்போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கவனஈர்ப்பு தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த தீர்மானத்தில் காவிரி மேலாண்மை வாரிய பணிகள் முழுதாக வரையறுக்கப்பட்டுள்ளது என்றும், மேகதாது அணை விவகாரம் குறித்தும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும், […]
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று வேலூர், காட்பாடியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு அமைச்சர் துரைமுருகன் தனது கருத்துக்களை கூறியிருந்தார். அண்ணாமலையின் பகல் கனவு… தமிழகத்தில் இரு மொழி கொள்கை தான் ! அரசு திட்டவட்டம்.! அவரிடம், முன்னாள் பிரதமர், மதசார்பற்ற ஜனதாதளம் (கர்நாடகா) தலைவர் தேவகவுடா பற்றி கேட்கப்பட்டபோது, தேவகவுடா பிரதமராக இருந்தபோதும் சரி, அதற்கு முன்னதும் சரி, தற்போதும் சரி தமிழகத்திற்கு ஒரு […]
ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்கவில்லை எனில், அதன் பின்னர் எங்களுடைய நிலைப்பாடு என்ன என்பது பிறகு தெரியும். தமிழக ஆளுநர் முழுக்க முழுக்க அரசியல் மட்டுமே செய்கிறார். – அமைச்சர் துரைமுருகன். வேலூர் மாவட்டம் பொன்னை ஆற்றின் குறுக்கே 40 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து பொன்னையில நடைபெற்ற திமுக கட்சி நிர்வாகிகள் உடன் […]
ஷட்டர் பழுதடைந்த பாலக்காடு, பரம்பிக்குளம் அணையை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், ‘ அணையில் இருந்து நீர் வெளியேறுவதை பார்க்கையில் மனம் வேதனைப்படுகிறது.’ என குறிப்பிட்டார். கேரளா மாநிலம் பாலக்காட்டில் அமைந்திருக்கும், பரம்பிக்குளம் அணை தான் கேரள மாநிலம் பாலகாடு, திருசூர் உட்பட தமிழகத்தில் கோவை சுற்றுவட்டார பகுதிக்கும் நீர் ஆதாரமாக திகழ்கிறது. அந்த பரம்பிக்குளம் அணையில் நேற்று அதிகாலை 1 மணி அளவில் தண்ணீர் திறக்கும் மதகு (ஷட்டர் செயின்) பழுதடைந்த காரணத்தால், […]
வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி. முன்னதாக,வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாமக, தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பிஆர் கவாய் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், சாதியை மட்டுமே அடிப்படையாக கொண்டு இடஒதுக்கீடு வழங்க […]
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கேள்வி கேட்க துணிவின்றி நீர்வளத்துறை அமைச்சர் காமெடி செய்து வருகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், 136.50 அடியை கடந்த நிலையிலும்,அணை நீர்மட்டத்தை 142 அடிவரை தேக்காமல் கேரளாவிற்கு நீர் திறந்து விட்டதற்கு அதிமுக சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில்,நேற்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பி.மூர்த்தி, சக்கரபாணி ஆகியோர் படகில் சென்று […]
தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைந்தும், அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப் பிரச்சனையில் எந்தத் தீர்வும் காணப்படவில்லை என்று ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரள அமைச்சர்கள் முன்னிலையில் கேரளாவிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது கேரள அரசின் தன்னிச்சையான நடவடிக்கையா அல்லது தமிழ்நாடு அரசின் இசைவுடனா அல்லது கேரள அரசின் தன்னிச்சையான நடவடிக்கை என்றால் அங்கு தமிழ்நாடு அரசு அதிகாரிகள் எப்படி கலந்து கொண்டார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளளர். மேலும்,இனியாவது, ‘நடந்தது […]
என் மக்களுக்கு தொண்டு செய்யாதவர்களை பழி வாங்குவேன் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு தடுப்பூசி முகாமை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று தொடங்கி வைத்தார். சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆயிரம் பேருக்கு தலா ரூ.1,500 மதிப்பிலான மளிகை பொருட்களை இலவசமாக வழங்கினார். பின்னர் கொரோனாவால் நலிவடைந்தவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். இதன்பின் இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், பொன்னை […]
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கலைஞரின் நிழலாக தொடர்ந்தவர்,என்னைப் போன்ற பலருக்கும் வழிகாட்டி என்று எம்பி கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று நீர்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக,நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு முதலில் பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக, இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் ஸ்டாலின்,”தலைவர் கலைஞர்,பேராசிரியர் அன்பழகன் இடத்தில் துரைமுருகன் உள்ளார்.அவர் பொன்விழா நாயகன்.கலைஞரின் அருகில் […]
தமிழக சட்டமன்றத்தில் முதல் முறையாக நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறவுள்ளது. சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.அந்த வகையில்,பொதுப் பணித்துறையில் இருந்து நீர்வளத்துறை தனியாக பிரிக்கப்பட்டு,அத்துறையின் அமைச்சராக துரைமுருகன் அவர்கள் நியமிக்கப்பட்டார். அதன்படி,அணைகள்,ஆறுகள்,ஏரி மற்றும் குளங்கள் போன்ற நீர் ஆதாரங்களின் வளத்தை பெருக்கும் பணிகள் நீர்வளத்துறையின் கீழ் வருகின்றன. இந்நிலையில்,முதல்முறையாக நீர்வளத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் தமிழக சட்டப் பேரவையில் […]
இன்று பிற்பகல் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு. டெல்லி சென்றுள்ள தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள், இன்று பிற்பகல் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின் போது தமிழகம் மற்றும் கர்நாடகா இடையிலான நதிநீர் பிரச்சனை குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் துரைமுருகன் அவர்கள், உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவேண்டிய காவிரி நீர் குறித்து பேசவிருப்பதாகவும், […]