கடைகளில் இருக்கையில் அமர்ந்து பணியாற்ற சட்டத்திருத்தம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. கடைகள், நிறுவனங்களில் நின்று பணியாற்றும் பணியாளர்கள், இருக்கையில் அமர்ந்து பணியாற்ற சட்டத்திருத்தம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1947 ஆம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்து சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்தத்தை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திட்டக்குடி கணேசன் தாக்கல் செய்தார்.
வேலை வாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க மூன்று மாதம் கால அவகாசம் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு. 2014, 15 மற்றும் 16-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் சிறப்பு புதுப்பித்தல் சலுகை மூலம் மூன்று மாதம் கால அவகாசம் வழங்கப்படும் என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி கணேசன் தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள், நலவாரிய ஓட்டுநர்கள், விபத்து மரணத்திற்கு […]