Tag: minister corona

தமிழகத்தில் மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அமைச்சர்கள் தங்கமணி, அன்பழகன், செல்லூர் ராஜூ ஆகிய மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலின் மகன் மற்றும் மருமகளுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அமைச்சருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் இவர், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4-ஆம் அமைச்சராவார்.

coronavirus 2 Min Read
Default Image