சென்னை: ஃபெஞ்சல் புயல் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட வடதமிழக மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இன்னும் மழைநீர் வடியாத காரணத்தால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக, பள்ளிகளிலும் வெள்ள நீர் இன்னும் வடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. இதன் காரணாமாக, விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் கடலூர், அண்ணா கிராமம், பண்ருட்டி ஆகிய 3 ஒன்றியங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி அரையாண்டு தேர்வு நடத்தப்படுமா? […]
திருச்சி : ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது வேகமாக பரவி வரும் குரங்கம்மை குறித்து உலக சுகாதார அமைப்பு சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது. உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் குரங்கம்மை குறித்த சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா தொற்று பரவல் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகள் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளன. மத்திய சுகாதாரத்துறை ஏற்கனவே குரங்கம்மை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மாநில அரசுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. தமிழகத்திலும் பன்னாட்டு […]
Public Exam: ரமலான் அன்று பொதுத்தேர்வு கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, இன்று மயிலாடுதுறை மாவட்டம் சென்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை செயல்வீரர்கள் கூட்டத்தில் அறிமுகப்படுத்தி வைத்தார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது, மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அலைதான் வீசுகிறது. எங்கு சென்றாலும் மக்கள் பெரும் ஆதரவு தருகின்றனர். மக்கள் தயாராக இருக்கிறார்கள், இன்றே […]
மிக்ஜாம் புயலின் பாதிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் சில பகுதிகளில் இன்னும் முழுதாக நீங்கால் இருக்கிறது. இன்னும் புறநகர் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதனை அகற்ற ஊழியர்கள் மும்முரமாக வேலை செய்து வருகின்றனர். இந்த கனமழையால் பள்ளி மாணவர்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாணவர்களின் பாட புத்தகங்கள் நீரில் மூழ்கின. பள்ளிக்கூடங்கள் சேதமடைந்து உள்ளன. இது குறித்து இன்று புதுக்கோட்டையில் மாணவர்கள் கல்வி நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பல்வேறு நடவடிக்கைகள் […]
போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அழைப்பு. சம வேலைக்கு சம ஊதியம் வழங்ககோரி சென்னை நுங்கப்பாக்கத்தில் 4ஆவது நாளாக அரசு பள்ளிகளின் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சற்று நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், இன்று அமைச்சருடன் நடக்க உள்ளது.
கலைத்திருவிழாவில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்று வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இடம்பெற வேண்டும். அதன் பிறகு உலக அளவில் சாதனை செல்வங்களாய் விளங்க வேண்டும். – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு வாழ்த்து. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் உள்ள அரசு பள்ளிகளுக்கு விசிட் அடித்து ஆய்வு செய்து மாணவ மாணவியர்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார். அதன்படி, இன்று திருச்செந்தூர் வந்திருந்த அவர் பிரசித்திபெற்ற முருகன் கோவிலில் தரிசனம் செய்தார். அதன் […]
வரலாற்றில் முதன் முறையாக சாரணர், சாரணியர் இயக்க பணிகள் குறித்து சட்டசபையில் விவாதிக்கப்பட்டது. – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். தமிழ்நாடு சாரணர் சாரணிய இயக்கத்தலைவரும், பள்ளிக்கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் அவர்கள் ஒரு பள்ளியில் சாரணர் சாரணிய இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்தகொண்டார். வழக்கம் போல சாரணர் சாரணிய உடையில் இந்த விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அவர் பேசுகையில், ‘ இதுவரை தமிழக சட்டமன்றத்தில் […]
தாட்கோ மூலமாக படித்து மொத்தம் 87 அரசு பள்ளி மாணவர்கள் ஐஐடியில் படிக்க தேர்வாகி உள்ளனர். – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் சார்பில் முதலாவது சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா லோகோவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இந்த நிகழ்வை அடுத்து செய்தியாளர்களை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்தித்து பேசினார். அப்போது பேசுகையில், சென்னையில் ஒலிம்பியாட் […]
மாதா, பிதா, கூகுள் , தெய்வம் என கொள்கை மாறிவிட்டது. கூகுள் தற்போது மாணவர்களின் குருவாக மாறிவிட்டது. என அமைச்சர் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவில் திருமங்கலக்குடியில் அமைந்துள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டார். அந்த பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், ‘ இன்று நடைபெறும் இந்தி எதிர்ப்பு […]
தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் செயல்படாமல் இருக்கும் அரசு பள்ளிகளில் மட்டும் தற்போதைக்கு அந்த பாடப்பிரிவை நிறுத்தி வைத்துள்ளோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் தமிழ்நாடு அறக்கட்டளை ஆண்டுவிழா நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் அரசுப்பள்ளிகளில் தொழிற்பயிற்சி பாடப்பிரிவுகள் மூடப்படுவதாக வெளியான தகவல்கள் பற்றி கேட்கப்பட்டது. அதற்க்கு பதிலளித்த அமைச்சர் […]
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக பல்லகிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தீவிர காய்ச்சல் காரணமாக சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் […]
தொடக்கப்பள்ளி கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தால், மாணவர்கள் அடுத்து 6ஆம் வகுப்பு மேல் சரியாகி விடுவார்கள். ஆதலால், தொடக்க கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டது என்றால், அது மாணவர்கள் தான். அவர்களின் கல்வித்திறன் வெகுவாக குறைந்துள்ளது என்ற குற்றசாட்டு பொதுவாக கூறப்படுகிறது. தற்போதைய காலாண்டில் தான் முழுமையாக மாணவர்கள் ஆரம்பம் முதல் பள்ளிக்கு நேரடியாக சென்று படித்து வருகின்றனர். […]
பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறப்பது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிடுவார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்னர், தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரிக்க தொடங்கிய நிலையில், மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 1 to 12-ம் […]
சென்னை:ஜனவரி 3 ஆம் தேதி திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும், மேலும்,ஏப்ரல் கடைசி வாரத்திலோ அல்லது மே முதல் வாரத்திலோ பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். நெல்லையில் சாஃப்டர் பள்ளிக் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில்,அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி கட்டடம் குறித்து கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில்,தமிழகத்தில் உள்ள பழுதான பள்ளி கட்டடங்களை இடிப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் […]
சென்னை:பழுதான பள்ளி கட்டடங்களை இடிப்பது,திருப்புதல் தேர்வு எப்போது நடத்தலாம்? போன்றவை குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். நெல்லையில் சாஃப்டர் பள்ளிக் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில்,அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி கட்டடம் குறித்து கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள பழுதான பள்ளி கட்டடங்களை இடிப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் […]
சென்னை:பழுதான பள்ளி கட்டடங்களை இடிப்பது,திருப்புதல் தேர்வு எப்போது நடத்தலாம்? போன்றவை குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். நெல்லையில் சாஃப்டர் பள்ளிக் கழிப்பறை சுவர் விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில்,அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி கட்டடம் குறித்து கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள பழுதான பள்ளி கட்டடங்களை இடிப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் முதன்மை […]
சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கும்போது மாணவர்கள் அருகில் உள்ள பள்ளியில் பயில நடவடிக்கை என அமைச்சர் தகவல். நெல்லையில் இயங்கி வரும் சாஃப்டா் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பள்ளி கழிப்பறை சுவா் இடிந்து விழுந்ததில் அந்தப் பள்ளி மாணவா்கள் அன்பழகன், விஸ்வரஞ்சன், சுதீஸ் ஆகிய 3 பேர் உயிரிழந்த நிலையில் 4 மாணவா்கள் காயமடைந்தனா். இதுதொடர்பாக பள்ளித் தலைமை ஆரிசியர் உள்ளிட்ட ஆகிய மூவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]
கோவை:பள்ளி மாணவ,மாணவியர் எந்த பிரச்சினையாக இருந்தாலும் உடனடியாக உதவி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கோவை சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நேற்று முன்தினம் சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பெற்றோர்,பல்வேறு அமைப்புகள்,மாணவர்கள் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து,தற்கொலைக்கு துண்டிய இயற்பியல் ஆசிரியர் மிதுன் […]
தமிழகத்தில் உள்ள பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால்,மழை பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் பள்ளிகள் தொடர்ச்சியாக விடுமுறை விடப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,பொதுத்தேர்வை மாணவர்கள் பயமின்றி எழுத நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும்,பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர்: “பொதுத்தேர்வை மாணவர்கள் […]
நவ.1 முதல் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம். மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நவ.1ஆம் தேதியில் இருந்து ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. காலை முதல் மாலை வரை வழக்கம்போல் முழு நேரமும் வகுப்புகள் நடைபெறும். திங்கட்கிழமை ஒரு வகுப்பிற்கு பாடம் நடத்தப்பட்டால் செவ்வாய் அன்று விடுமுறை என தெரிவித்தார். எந்த […]