புதிய படிவம் வழங்குவது ஏன்? -ஆவின் நிர்வாகம் விளக்கம்!
பால் அட்டைதாரர்கள் குறிப்பிட்ட முகவரியில் வசிக்கவில்லை என்பதால் புதிய படிவம் விநியோகம் என ஆவின் நிர்வாகம் விளக்கம். இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஆவின் நிர்வாகம்,, 80,000 பால் அட்டைதாரர்கள் குறிப்பிட்ட முகவரியில் வசிக்கவில்லை என்பதால் புதிய படிவம் விநியோகம் செய்யப்படுகிறது. குறிப்பிட்ட முகவரியில் பால் அட்டைதாரர்கள் வசிக்காததை கண்டறிந்ததால் மாதம் ரூ.36 லட்சம் நஷ்டம் தவிர்க்கப்படுகிறது. புதிய படிவத்தில் கல்வித்தகுதி, தொழில் விவரம், வருமானம், ஆதார் விவரங்களை குறிப்பிட வேண்டியதில்லை என்றும் கூறியுள்ளது. நுகர்வோர்களின் வசதிக்காக பால் அட்டைதாரர்களின் […]