ஒப்பந்தத்தை மீறி லடாக்கில் சீன படையினர் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இந்திய எல்லையான லடாக் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறியதாக ராணுவ செய்தித்தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக்கில் தற்போதுள்ள சூழலை சிதைக்கும் சில காரியங்களில் சீனா ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. அதாவது, நேற்று மற்றும் நேற்று முன்தினம் பான்காங் சோ ஏரியின் தெற்குக் கரை பகுதியில் அத்துமீற முயன்ற சீன ராணுவத்தை இந்திய படை விரட்டியடித்தது என்று கூறியுள்ளனர். […]
ஜம்மு-காஷ்மீரில் இந்திய நாட்டின் எல்லை பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்த ஹவில்தார் திருமூர்த்தி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதியுதவி. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ள புள்ளவராயன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் திருமூர்த்தி 173வது படைப்பிரிவில் ஹவில்தாராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த ஜூலை 26-ம் தேதி அன்று இந்திய எல்லையில் வழக்கமான ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது துப்பாக்கி குண்டு வெடித்ததில் படுகாயமடைந்து மருத்துமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், ஜூலை 31-ம் தேதி சிகிச்சை […]
இரவு பகலாக எல்லை பகுதியில் நாட்டை பாதுகாக்கும் பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்) வீரர்களையும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது. கொரோனாவால் பல்வேறு விதமாக பாத்திப்பு சந்தித்து வருகிறோம். இந்த வைரஸ் பதிப்பில் இருந்து மக்களை காக்க போராடும், மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் நாட்டை காக்கும் ராணுவ வீரர்கள், காவல்துறை போன்றவர்களை கொரோனா தொற்று பரவி வருகிறது. நாடு முழுவதும் இதுவரை இந்த கொடிய வைரசால் 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், […]
இந்திய ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உயர் பதவிகள் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ராணுவத்தில் பெண்களுக்கான நிரந்தர கமிஷன் அமைக்கக்கோரி தீர்ப்பு வழங்கியுள்ளது. பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் வலம் வந்து சாதனை படைத்து வருகின்றனர். இவர்கள் எந்த வகையிலும் குறைந்தவர்கள் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் நாட்டை காப்பாற்றும் பணியான இராணுவத்திலும் சேர்ந்து சாதித்து உள்ளனர். இந்த நிலையில் இந்திய ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உயர் பதவிகள் […]