லடாக் எல்லைப்பகுதியில் தொடர்ந்து இருநாட்டு படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தியா மற்றும் சீனா எல்லைப் பகுதிகள் பெரும்பாலும் மலைப் பகுதியாக உள்ளது. இதனால், எல்லைகளை நிர்ணயிக்க வேலி போன்ற தடுப்புகள் எதும் இல்லையென்றாலும் இருநாட்டு எல்லைகள் தனியாக இருக்கிறது. லைன் ஆப் ஆக்சுவல் கண்ட்ரோல் என்று கூறப்படும், யார் கட்டுப்பாட்டில் எந்த பகுதி உள்ளது என்பது தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதிகளில் ரோந்து பணி மேற்கொள்ளும்போது, இதுபோன்ற பிரச்சனைகள் நிகழ்கின்றன. இதனிடையே, […]