துணை அதிபர் மைக் பென்ஸ் இன்று கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள உள்ளதாகவும் ,அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் அடுத்த வாரம் தடுப்பூசி செலுத்த உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், அமெரிக்காவில் பைசர் நிறுவன தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.பைசர்-பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இதனிடையே இன்று கொரோனா வைரஸ் தடுப்பூசியை துணை […]
டிரம்ப் அரசிடம் கொரோனாவை எதிர்கொள்ள சரியான திட்டமில்லை என்று கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார். மேலும், குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அமெரிக்காவில் தேர்தல் தொடங்கும் முன்னே, அதிபர் […]