உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பரவிய கொரோனா தொற்று பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில்,ஏராளமான மக்கள் உயிரிழந்தனர்.இதனைத் தொடர்ந்து,தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருவதையடுத்து கொரோனா தொற்று பெருமளவில் குறைந்து காணப்பட்டது. ஆனால்,கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே,உலக பணக்காரர்களில் ஒருவரும்,மைக்ரோசாஃப்ட் இணை நிறுவன தலைவருமான பில்கேட்ஸ் கொரோனா தொற்றுநோயைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு,குறிப்பாக தடுப்பூசிகள் மற்றும் ஏழை நாடுகளுக்கான கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்கும் […]