இந்திய மாணவர்கள் இஸ்லாமிய இயக்கத்துக்கு (SIMI) விதிக்கப்பட்ட தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். இந்திய மாணவர்கள் இஸ்லாமிய இயக்கத்துக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும், நாட்டுக்கு எதிரான சதிச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டப்பட்டது. இதன்காரணமாக இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம் (சிமி) முதன்முதலில் பிப்ரவரி 1, 2014 அன்று இந்திய அரசால் தடை செய்யப்பட்டது. உத்தரப் பிரதேசம், கேரளா, டெல்லி, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், […]
பாகிஸ்தானில் உயர்கல்வி படித்தால், இந்தியாவில் வேலைவாய்ப்பு பெறவோ, படிப்பைத் தொடரவோ முடியாது. இதுதொடர்பாக UGC & AICTE வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், உயர் கல்வியைத் தொடர பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனால், பாக்கிஸ்தானின் எந்தவொரு பட்டப்படிப்பு கல்லூரி/கல்வி நிறுவனத்தில் சேர்க்கை பெற விரும்பும் எந்தவொரு இந்தியரும் மற்றும் இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகனும், பாகிஸ்தானில் பெற்ற கல்வித் தகுதிகளின் அடிப்படையில் (எந்தப் பாடத்திலும்) இந்தியாவில் வேலை வாய்ப்பு பெறவோ அல்லது உயர்கல்வி படிப்பை தொடரவோ தகுதி பெற […]
தமிழகத்தில் திருவிழா,அரசியல் உள்ளிட்ட சில முக்கிய நிகழ்வுகளுக்கு அக்டோபர் 31ம் தேதி வரை தடை விதித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, நடைமுறையில் உள்ள கோவிட்-19 கட்டுப்பாடுகளை, 15.09.2021 காலை 6.00 மணி வரை நீட்டித்து ஏற்கெனவே அரசு ஆணையிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 27.5.2021 அன்று 36,000-க்கும் மேற்பட்ட அளவில் இருந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது நாள் தோறும் சுமார் 1600 புதிய நோய்த் தொற்று கண்டறியப்படுகிறது. […]
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு மே 31 வரை செயல்படுத்த வேண்டிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள நிலையில், இவை அனைத்தையும் முறையாக பின்பற்ற வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவறுத்தியுள்ளது. நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. தினமும் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவதுடன், ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் வருகின்ற […]
சிறப்பு ஆயுதப்படை சட்டத்தின் கீழ் அடுத்த 6 மாதங்களுக்கு நாகலாந்தை பதற்றமான பகுதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் பல ஆண்டுகளாக உள்நாட்டு ஊடுருவல், பதற்றம் போன்ற காரணங்களால் அமைதியற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் 1958-ம் ஆண்டு சிறப்பு ஆயுதப்படை சட்டத்தின் கீழ் நாகாலாந்து மாநிலம் முழுவதையும் பதற்றம் நிறைந்த பகுதியாகவும், ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அடுத்த 6 மாதங்களுக்கு நாகாலந்தை பதற்றமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.