திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் 31ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவானது அரசு சார்பாக சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவின்போது சுமார் 25,500 பயனாளிகளுக்கு 24 அரசு துறை மூலம் 640 கோடி நலத்திட உதவிகள் வழங்கப்படவுள்ளது என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
புரட்சித் தலைவர், மக்கள் திலகம் என்று அழைக்கப்படும் எம்.ஜி.ஆர் மறைந்த தினம் இன்று. 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் இலங்கையில் உள்ள நாவலப்பிட்டியில் பிறந்தார். மக்கள் அனைவராலும் நேசத்தோடு எம்.ஜி.ஆர் என்று அழைக்கப்பட்ட இவரின் இயற்பெயர் மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன். தன்னுடைய சிறுவயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கியதோடு, தன்னுடைய அயரா உழைப்பு காரணமாக திரைத்துறையில் கால்பதித்தார். 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் துவங்கிதோடு, […]
கோவை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பேனர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற தடை: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் 100 பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவானது நடைபெற்று வருகிறது. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோரது படம் போட்டு பல பெரிய பெரிய பேனர்களும்,தோரண வாயில்களும் மக்கள் அனுதினமும் பயணிக்கும் சாலை மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கபட்டிருந்தன.இந்நிலையில் உயர் நீதிமன்றமானது உயிரோடு […]
கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடக்கக் கூடாது என்பதே திமுகவின் எண்ணம்,தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் மக்கள் நலத்திட்டங்களை கொண்டுவரவே எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என திமுகவின் குற்றசாட்டுக்கு பதிலளித்துள்ளார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.