Tag: mgmhospital

#BREAKING: ஓபிஎஸ்-க்கு கொரோனா அறிகுறி – மருத்துவமனை அறிக்கை!

லேசான கொரோனா தொற்று அறிகுறி காரணமாக ஓ.பி.எஸ் மருத்துவமனையில் அனுமதி என மருத்துவமனை அறிக்கை. ஓ.பன்னீர்செல்வம் காய்ச்சல் காரணமாக இன்று காலை சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓபிஎஸ்-க்கு கொரோனா தொற்று இல்லை என்றும், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் தகவல் வெளியாகியிருந்தது.  தனக்கும் சில அறிகுறிகள் இருப்பதாகவும் இரண்டு நாட்களாக லேசான மயக்கம் உடல் வலி காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாகவும் மருத்துவர்களிடம் ஓபிஎஸ் தெரிவித்தாக கூறப்பட்டது. இந்த நிலையில், முன்னாள் […]

#AIADMK 3 Min Read
Default Image

பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக உள்ளது – மருத்துவமனை நிர்வாகம்.!

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தனியார் மருத்துவமனை அறிக்கையில், பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் பிசியோதெரபி சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகிறார் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், ஐசியூவில் உள்ள எஸ்.பி.பி.க்கு வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவி உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், எஸ்.பி.பி.யின் உடல்நிலையை மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

coronavirus 2 Min Read
Default Image

பாடகர் எஸ்.பி.பி உடல்நிலையில் முன்னேற்றம் – எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம் கண்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. எஎஸ்.பி.பி உடல்நிலை குறித்து சிகிச்சை அளித்து வரும் எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்றும் அவருக்கு தொடர்ந்து வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் எஸ்.பி.பியை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை மேலும் முன்னேற்றம் அடைந்துள்ளதாக அவரது மகன் சரண் வீடியோ வெளியிட்டிருந்தார். […]

coronavirus 3 Min Read
Default Image