விபத்தில் மூளைச்சாவு அடைந்த 5 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம். புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு விபத்தில் சிக்கிய 5 வயது சிறுவன் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் ஆகஸ்ட் 22 அன்று அவர், சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர்க்கு மாற்றப்பட்டார். அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, சிறுவனின் உறுப்பு தானம் தொடர்பாக, சிறுவனின் பெற்றோரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின், உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக் கொண்டன. எம்ஜிஎம் மருத்துவமனை, தமிழ்நாடு […]
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து மருத்துவ நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஐ.சி.யுவில் இருக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்றும் தொடர்ந்து நினைவுடன் உள்ளார் என்று கூறியுள்ளது. எக்மோ, வென்டிலேட்டர் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எஸ்.பி.பி.யின் உடல் பிஸியோதெரபி சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறது […]
சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.