விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் உடலநலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ரயிலில் சென்றபோது திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த அழுத்தம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சர் மெய்யநாதன் அவர்கள், செல்வ பிரபுவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். கொலம்பியாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் U/20 தடகளப் போட்டியின் மும்முறை தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட தமிழ்நாட்டு வீரர் செல்வ பிரபு வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து, அமைச்சர் மெய்யநாதன் அவர்கள், செல்வ பிரபுவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘கொலம்பியாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் U/20 தடகளப் போட்டியின் மும்முறை தாண்டுதல் போட்டியில் இந்தியா […]
கபடி வீரர்களுக்கு காப்பீடு திட்டம் ஏற்படுத்தி தர நடவடிக்கை மேற்கொள்ள திட்டம் உள்ளது என அமைச்சர் மெய்யநாதன் பேட்டி. கடலூர் மாவட்டம் பண்ருட்டி மாணடிகுப்பத்தில் நடைபெற்ற கபடி போட்டியின் போது கபடி வீரர் விமல்ராஜ் என்பவர் விளையாடிக் கொண்டிருந்தபோது மைதானத்திலேயே சுருண்டு விழுந்து உயிர் இழந்தார். இவரது மரணம் பலரையும் வேதனைக்கு உள்ளாக்கிய நிலையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த நிலையில், இது குறித்து அமைச்சர் மெய்யநாதன் அவர்கள், கபடி வீரர் விமல்ராஜ் […]
இன்று விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர், துறை செயலாளர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், விளையாட்டு வீரர்கள், விளையாட்டு நல சங்கங்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் விளையாட்டு தொடர்பான தகவல்களை பெற்றிடவும், குறைகள் தெரிவித்திடவும் தகவல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறையினை […]