மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு வினாடிக்கு 9,160 கன அடியிலிருந்து, 5,938 கன அடியாக குறைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை கர்நாடக மாநிலத்தில் தீவிரமடைந்து இருந்ததால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வழிந்தன. இதையடுத்து இந்த இரண்டு அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், ஒரு கட்டத்தில் வினாடிக்கு ஒரு லட்சத்து இருப்பது ஆயிரம் கன அடி என்ற அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் விரைவில் மேட்டூர் அணை நிரம்பி வழிந்தது. […]