சென்னை பேசின்பிரிட்ஜ் பணிமனையில் இருந்து கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானது.அப்போது ரயிலில் இருந்து ஓட்டுநர் வெளியே குதித்தததால் அவருக்கு காயம் ஏற்பட்டது.எனினும்,ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் சேதம் ஏற்படவில்லை. இதனையடுத்து,இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து,ரயில் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இதனிடையே,9 மணி நேரத்துக்கும் மேலான கடும் முயற்சிக்கு பிறகு விபத்துக்குள்ளான […]
சென்னை பேசின்பிரிட்ஜ் பணிமனையில் இருந்து கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி நேற்று விபத்துக்குள்ளானது.அப்போது ரயிலில் இருந்து ஓட்டுநர் வெளியே குதித்துள்ளார். பயணிகள் யாரும் இல்லையா?: எனினும்,பணிமனையில் இருந்து வந்தது என்பதால் மின்சார ரயிலில் பயணிகள் யாரும் இல்லை எனவும்,மேலும்,இந்த விபத்தில் ரயில் ஓட்டுநர் மட்டும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து,ரயில் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ரயில் விபத்துக்கு […]
சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து நேற்று விபத்துக்குள்ளானது.பணிமனையில் இருந்து வந்த ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி நின்றதால் விபத்து ஏற்பட்டது. பிரேக் சரியாக இயங்காததால்,ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி ரயில் விபத்துக்குள்ளானதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.மேலும்,ரயிலில் யாரும் இல்லை எனவும்,விபத்தில் ரயில் ஓட்டுநர் மட்டும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து,ரயில் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. […]
பிரதமர் மோடி கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்து, முதல் ரயிலில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் 150 குழந்தைகளுடன் பயணம் செய்தார். கான்பூரில் உள்ள மெட்ரோ ரயில் திட்டத்தின் முழு நீளம் 32 கி.மீ. இது 11,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று கான்பூர் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அவர்கள், கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். அதனை […]
மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள பெட்ரோனஸ் இரட்டைக்கோபுர சுரங்கப் பாதையில் நேருக்கு நேர் மோதிய மெட்ரோ ரயில்கள். மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள பெட்ரோனஸ் இரட்டைக்கோபுர சுரங்கப் பாதையில், மெட்ரோ ரயில் ஒன்று காலி பெட்டிகளுடன் சென்று கொண்டிருந்தது. அதே வழித்தடத்தில் 213 பயணிகளுடன் மற்றோரு ரயில் வந்துள்ளது. இந்த இரண்டு ரயில்களும் நேருக்கு நேர் மோதியதில் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில், 47 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 166 பேர் […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நாளை முதல் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்பட்டு வரும் நிலையில் பண்டிகை காலங்களை முன்னிட்டு ரயில்களை இரண்டு மணி நேரம் கூடுதலாக இயக்கவுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் ஏற்கனவை தெரிவித்திருந்தது. அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு நாளை முதல் மெட்ரோ ரயில்களின் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி […]
பயணிகளின் வசதிக்காக இன்று முதல் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்பட்டு வரும் நிலையில் பண்டிகை காலங்களை முன்னிட்டு ரயில்களை இரண்டு மணி நேரம் கூடுதலாக இயக்கவுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி, நவராத்திரி விழாவை கொண்டாடி விட்டு தங்கள் ஊர்களுக்கு திரும்புபவர்களின் வசதிக்காக வழக்கமாக காலை 7 மணிக்கு இயக்கப்படும் ரயிலை காலை 5.30 மணிக்கு […]
சென்னை மெட்ரோ ரயில் சேவைகள், காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை நீடிக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை செப். 30- ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்காரணமாக, செப். 7 ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவுள்ளது. 5 மாதங்களுக்கு பின், மத்திய மற்றும் […]
மெட்ரோ ரயில்கள் செப். 7 முதல் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், மாநில அளவிலான தளர்வுகளுடான ஊரடங்கு, செப்.30 வரை நீடிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. அதன்படி, நாளையுடன் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில், கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை, செப். 30- […]
செப். 7- ம் தேதி முதல் மெட்ரோ ரயில்களுக்கான சேவை தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 25- ம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு, மே 31- ம் தேதி வரை கடுமையாக இருந்தது. அதன்பின், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசு, ஜூன் 1 முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் […]