நாட்டின் முதல் ஆளில்லா மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் இந்த மத இறுதியில் துவங்கிவைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் ஜனக்புரியின் மேற்கு மற்றும் தாவரவியல் பூங்கா உள்ள மெஜந்தா பாதையில் நாட்டின் முதல் ஆள் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை இந்த மாதத்தின் இறுதியில் பிரதமர் மோடி அவர்களால் கொடியசைத்து துவங்கி வைக்கப்படும் என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் டிரைவர் இல்லாத தங்களது மெட்ரோ ரயில் நாட்டின் முதல் ரயில் […]
டெல்லி மெட்ரோ சேவைகள் 169 நாட்களுக்கு பிறகு இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக மெட்ரோ சேவைகள் முடக்கப்பட்டிருந்தது. தற்போது விதிக்கப்பட்டுள்ள தளர்வுகள் காரணமாக இன்று முதல் மெட்ரோ சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. அறிகுறியற்ற நபர்கள் மட்டுமே ரயில்களில் ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கட்டுப்பாட்டு மையங்களில் உள்ள ரயில் நிலையங்கள் மூடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் ஆரோக்யா சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் […]
4-ம் கட்ட ஊரடங்கு தளர்வு மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர்,மே மாதம் வரை கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 31-ம் தேதி உடன் 3-ம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ளது. இந்நிலையில், 4-ம் கட்ட தளர்வுகள் செப்டம்பர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]