மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயர் வைக்க கோரிய மனு தள்ளுபடி. சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயர் வைக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கலைஞர் தமிழ் பேரவையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மெட்ரோவுக்கு பெயர் சூட்டும்படி நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும் அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.