15-டன் விண்கல்லில் இருந்து புதியதாக இரண்டு கனிமங்கள் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..!! 2020 ஆம் ஆண்டு சோமாலியா நாட்டில் இருந்து ஒரு பெரிய விண்கல், கண்டுபிடிக்கப்பட்டது. 15 டன் எடை கொண்ட அந்த விண்கல்லின் மாதிரியில் இருந்து, கனடா நாட்டின் விஞ்ஞானிகள் குழு, இதுவரை கண்டுபிடிக்கப்படாத இரண்டு புதிய கனிமங்களை கண்டுபிடித்துள்ளனர். மேலும் 3ஆவது கனிமம் கண்டுபிடிக்கும் சோதனை நடந்து வருவதாகவும் தெரிவித்தனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட இந்த விண்கல்லானது கிழக்கு ஆப்பிரிக்காவின் சோமாலிய நாட்டின், கிராமப்புற […]
1969-இல் பூமியில் விழுந்த விண்கல் காந்தத்தின் உதவியுடன் சூரிய மண்டலத்தின் வரலாற்றை ஒரு ஆய்வு கூறுகிறது. ஐ.ஏ.என்.எஸ்ஸில் ஒரு அறிக்கையின்படி, சூரிய குடும்பத்தின் ஆரம்பகால தோற்றம் பற்றியும், பூமி போன்ற சில கிரகங்கள் ஏன் வாழ்விடமாக மாறியது மற்றும் உயிருக்கு உகந்த நிலைமைகளைத் தக்கவைத்துக் கொள்ள முடிந்தது என்பதையும் பற்றி விஞ்ஞானிகள் அறிய உதவும் தகவல்களை காந்தத்தின் உதவியுடன் ஒரு புதிய ஆய்வு வெளிவந்துள்ளது. அதன்படி, நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் எர்த் அண்ட் என்விரான்மென்ட் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், […]
நாசா என்ற அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையம் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்கிறது. நாசா ஓசிரிஸ்-ரேக்ஸ் என்ற வகையை சார்ந்த செயற்கைக்கோளை “பின்னு ” என்ற விண்கல்லை ஆய்வு நடத்துவதற்காக விண்ணுக்கு அனுப்பியது. பூமியில் இருந்து 110 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள “பின்னு ” என்ற விண்கல்லின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நாசாவின் விண்கலம் நுழைந்து சாதனை படைத்துள்ளது.மேலும் விண்கல்லின் சுற்றுப்பாதையை சென்றடைந்துள்ளது இதுவே முதல் முறையாகும். தொடர்ந்து ஆய்வு நடத்தி “பின்னு” விண்கல் பற்றிய அறிந்து கொள்வோம் என்று நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 1ந் தேதி பூமியை விண்கல் ஒன்று தாக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். ‘2002 NT7’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த விண்கல் சுற்று வட்டப் பாதையில் நோக்கி பயணித்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2 கி .மீ பரப்பளவு கொண்ட அந்த விண்கல், ஒரு கண்டத்தை அழிக்கும் வல்லமை கொண்டதாகவும், 30 மில்லியன் அணுகுண்டு சக்தி கொண்டதாகவும் கருதப்படுகிறது. மேலும், பூமியிலிருந்து 38 மில்லியன் மைல்கல் தூரத்தில் அந்த விண்கல் […]
ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக மேலும் ஒரு விண்கல் பூமியை மிக நெருக்கமாகக் கடந்து செல்லவிருக்கிறது. 15 முதல் 40 மீட்டர் வரையிலான அளவு கொண்ட இந்த சிறிய விண்கல், பூமிக்கு 64,000 கி.மீ. தொலைவில் வரும் சனிக்கிழமை கடந்து செல்லும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2018 சிபி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கல் பூமியைக் கடந்து செல்வதால் எந்த ஆபத்தும் இல்லை என்றும் அவர்கள் கூறினர். முன்னதாக, பூமிக்கு அருகே சூரியனைச் சுற்றி வரும் நடுத்தர […]