சிரியா, அலெப்போ நகரில், பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கொண்டாடப் படும் கிறிஸ்துமஸ் பண்டிகை. அங்கு நடந்த உள்நாட்டுப் போரில், அலெப்போ நகரம் அல்கைதா போன்ற முஸ்லிம் மத அடிப்படைவாத இயக்கங்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்தக் காலங்களில், அலெப்போவில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் வெளியேற்றப் பட்டதுடன், கிறிஸ்தவ மதக் கொண்டாட்டங்களும் தடை செய்யப் பட்டிருந்தன. ஆனால், மேற்கத்திய “கிறிஸ்தவ”(?) நாடுகள் அதைக் கவனிக்காது, தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பேசிக்கொண்டிருந்தன.