சென்னை மெரினா கடற்கரையில் வடிவமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மெரினா கடற்கரையில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கவும் பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தமிழக அரசின் 181 மகளிர் உதவி மையத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த மணல் சிற்பத்தை திறந்து வைத்தார். அந்த மணல் சிற்பத்தில், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம் என எழுதப்பட்டிருந்தது.
கடல் சீற்றத்தால், மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை சேதம் அடைந்துள்ளது. மாண்டஸ் புயல் எதிரொலியால் சென்னை மெரினா கடற்கரை சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் சீற்றத்தால், மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை சேதம் அடைந்துள்ளது. மெரினா, காசிமேடு கடல் பகுதியில் அலைகள் ஆக்ரோஷமாக எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது. மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூட வாய்ப்புள்ளது. இதனால், ஜன.15, 16, 17 ஆகிய தேதிகளில் மெரினா உட்பட அனைத்து கடற்கரைகளிலும் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் சென்னையில், பொங்கல் தினத்தையொட்டி பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொங்கலன்று கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், வார விடுமுறை விடப்பட்டுள்ளதால், பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூட வாய்ப்புள்ளது. இதனால், ஜன.15, 16, 17 ஆகிய தேதிகளில் மெரினா உட்பட […]
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் 2019 ம் ஆண்டை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர் சென்னையில் மெரினா, பெசண்ட் நகர் கடற்கரைகளில் குவிந்த மக்கள் புத்தாண்டை வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் இனிப்புகள் வழங்கி வெகு விமரிசையாக கொண்டாடினர். சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்தும் சிறப்பு பிரார்த்தனை செய்தும் புத்தாண்டை வரவேற்றனர். அதேபோல நகரின் பல்வேறு முக்கிய இடங்களிலும் திரண்ட இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என பலர் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். கோவையிலும் […]
வடபழனி சிவன் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 2017 மே 8ம் தேதி மின் கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மீனாட்சி, சந்தியா உள்ளிட்ட 4 பேர் உடல் கருகி பலியாகினர். 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திய தமிழக அரசு அந்த கட்டிடத்திற்கு சீல் வைக்க உத்தரவிட்டது.இதுதொடர்பாக ட்ராபிக் ராமசாமி ஏற்கனவே வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது பலியானோர் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட இழப்பீடு […]
தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் நேற்று காவேரி மருத்துவமணையில் சிகிச்சை பலனலிக்காமல் அவருடைய உயிர் பிரிந்தது. இந்த நிலையில் அவருடைய உடலை மெரினாவில் அடக்கம் செய்வது குறித்து வழக்கு நேற்று நள்ளிரவு முதலே நடந்து வந்தது இன்று இது தொடர்பான வழக்கில் கலைஞர் கருணாநிதிக்கு மெரினாவில் இடமளித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர். இதனை அடுத்து தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி மெரினாவில் நல்லடக்கம் செய்வது தொடர்பான மாதிரி வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு […]
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் நடத்திய முற்றுகை போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. நெஞ்சை பதற வைத்த பயங்கர சம்பவம் மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை அறிவித்துள்ளன. புரட்சிகர மாணவர்கள் அமைப்பினர் கோட்டை முற்றுகை போராட்டத்தை அறிவித்தனர். மேலும் பல மாணவர் சமூக பொது நல அமைப்புகள் மெரினாவில் திரள்வதாக தகவல் […]