கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளில் ஒன்றாக மெரினாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்டது. அது முதல், பள்ளிகள், கல்லூரிகள், போக்குவரத்துக்கு, சுற்றுலாத்தலங்கள் என அனைத்தும் முடக்கப்பட்டது. இந்நிலையில், மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில், ஊரடங்கு இந்த மாதமும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சில புதிய தளர்வுகளையும் அறிவித்துள்ளது. அதன்படி சுற்றுலாத்தலங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அது போல வருகின்ற டிசம்பர் […]