டோக்கியோ ஒலிம்பிக்:துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர்கள் தோல்வி..!

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் 50 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர்கள் பிரதாப் சிங் தோமர்,சஞ்சீவ் ராஜ்புத் தோல்வியுற்றுள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆடவர் 50 மீட்டர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் பிரதாப் சிங் தோமர்,சஞ்சீவ் ராஜ்புத் ஆகியோர் கலந்து கொண்டனர்.ஐஸ்வர்ரி பிரதாப் சிங் தோமர் 1167 (63x) புள்ளிகளை பெற்றார்.அதே சமயம் சக வீரர் சஞ்சீவ் ராஜ்புத் 1157 (55x) புள்ளிகளை பெற்றார்.

இதனால்,துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் பிரதாப் சிங் தோமர் 20 வது மற்றும் சஞ்சீவ் ராஜ்புத் 32வது இடத்தை பிடித்து தோல்வியடைந்தனர்.மேலும்,இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தனர்.

ரஷ்ய வீரர் செர்ஜி கமென்ஸ்கி 1183 (78x) புள்ளிகளுடன் முதல் இடத்திலும் சீனாவின் சாங்கோங் ஜாங்கும் 1183 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.