அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அதிமுகவில் ஏற்கெனவே உறுப்பினர்களாக இருந்து பதிவை புதுப்பிக்காதவர்கள் மற்றும் விடுபட்ட உறுப்பினர்களை அதிமுகவில் சேர்ப்பதற்கான கடைசி நாள் 10-ம் தேதி என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போதைய சூழ்நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை சேர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்து தர வேண்டி, மாவட்டக் கழகச் செயலாளர்களும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், அவர்களுடைய கோரிக்கையை பரிசீலனை செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை சேர்ப்பதற்கான காலக்கெடு 17-ம் […]