சென்னை : சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு அமலாக்கத்துறை ரூ.908 கோடி அபராதம் விதித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும் அரக்கோணம் தொகுதி திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகனுக்கு, ரூ.908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. அதன் அடிப்படையில், ரிசர்வ் வங்கியின் ஒப்புதலை பெறாமல், சிங்கப்பூர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதில் சட்டவிதிகள் […]
கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தொழிற்சாலைகள், நிதி நிறுவனங்கள் என எதுவும் இயங்காமல் இருக்கிறது.இதனால், நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், முக்கிய முடிவாக நாட்டின் பிரதமர், குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், ஆளுநர்கள் உட்பட அனைத்து எம்பி-களின் சம்பளமும் 30 சதவீதம் குறைக்கப்படுகிறது எனவும், இந்த சம்பள குறைப்பு ஓராண்டுக்கு அமலில் இருக்கும் எனவும் மத்திய அமைச்சரவை குழுவில் […]
கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் தங்கியுள்ள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் ராகுல் காந்தி. தென் மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது.கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. 8-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் சேதமடைந்துள்ளது.குறிப்பாக வயநாடு மாவட்டம் பெரும் சேதத்துக்கு உள்ளாகி உள்ளது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ராகுல் காந்தி இன்று கேரளாவிற்கு சென்றார்.அங்கு தனது மக்களவை […]
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கியது மிக மோசமானது. இது ஜனநாயகத்திற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி.இந்தியாவின் ஒரு பகுதி தான் ஜம்மு காஷ்மீர் என்று சொல்வது அப்பட்டமான பொய். சிறப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது .அந்த மக்கள் அமைதியாக வாழ்ந்து வருகிற நேரத்தில் சிறப்புரிமையை நீக்கி இருப்பது காஷ்மீர் மக்களுக்கு செய்கிற துரோகம். ஜம்மு காஷ்மீரில் இனிமேல் நிலம் […]
இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது.ஆனால் தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது.இந்த கூட்டணியில் பாஜக ,பாமக,புதிய தமிழகம்,தேமுதிக ,புதிய நீதிக்கட்சி ,தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய காட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.ஆனால் மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.தேனி தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றிபெற்றது. தேர்தலில் கூட்டணியில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்,அதிமுக கூட்டணியில் உள்ள பாமக […]
சென்னை தாம்பரம் அருகில் ஹஸ்தினாபுரம் மற்றும் சேலையூரின் சில பகுதிகள் பிரிக்கப்பட்டு சிட்லபாக்கத்தில் நேற்று புது அஞ்சலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் தென் சென்னையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஜெயவர்தன், தமிழ்நாடு அஞ்சலகத்துறை இயக்குனர் உயர்திரு.எம்.சம்பத் IPoS, சென்னை மாநகர அஞ்சலகத்துறை இயக்குனர் உயர்திரு.ஆர்.ஆனந்த் IPoS ஆகியோர் பங்கெடுத்தனர். இதன் முதற்கட்டமாக அரசு பள்ளியில் பயிலக்கூடிய 182 பெண் குழந்தைகளுக்கான SSA கணக்கானது (Account) நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஜெயவர்தன் பங்களிப்பின் மூலமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அஞ்சலகத்தின் பின் கொடு நம்பர் […]