காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிப்பதற்கான தடை நீட்டிப்பு. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு செய்து தமிழக அரசு தொடர்ந்த வழக்க்கில் விசாரணையை ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம். காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த உத்தரவு தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் அமர்வில் மேகதாது அணை விவகாரம் […]
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்க தடை என உச்சநீதிமன்றம் அறிவிப்பு. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. ஆணைய கூட்டம் 22-ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது, மேகதாது அணை பற்றி கூட்டத்தில் விவாதிக்க ஆணையம் ஒப்புக்கொண்டதை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடக அரசு காரசார விவாதத்தை முன்வைத்தனர். தமிழக அரசின் […]
காவிரியில் மேகதாது அணையை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து முயன்று வரும் நிலையில்,இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும்,மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மைக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்றும் பிரதமர் மோடிக்கு அண்மையில் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதற்கிடையில்,தஞ்சை கல்லணையில் ஆய்வு செய்த பின்னர் காவிரி மேலாண்மை ஆணையத்தின் குழு தலைவர் ஹல்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:”மேகதாது உள்ளிட்ட அணை விவகாரங்கள் குறித்து விவாதிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு முழு அதிகாரம் […]
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில 15வது சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டதொடர் கடந்த ஆக.26 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.துணைநிலை ஆளுநரின் தமிழ் உரையுடன் தொடங்கிய இந்த பட்ஜெட் கூட்டதொடர்,முதல்வர் தாக்கல் செய்த மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்துடன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் முன்மொழிந்த தீர்மானம் அடுத்து,ஒரு […]
காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக எம்பி தம்பிதுரை வலியுறுத்தல். கர்நாடகாவில் காவேரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று அதிமுக எம்பி தம்பிதுரை நாடாளுமன்ற மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். மேலும் காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னதாக நான் டெல்லி சென்றபோது மேகதாதுவுக்கு ஒப்புதல் தருவதாக மத்திய அமைச்சர்கள் கூறினார்கள். மேகதாதுவில் அணை […]
மேகதாது அணையை காட்டியே தீருவோம் என கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, மேகதாதுவில் அணை கட்டுவதில் 100 சதவீதம் உறுதியாக உள்ளோம். மேகதாதுவில் அணை கட்ட உச்சநீதிமன்றம் எந்த தடையையும் விதிக்கவில்லை என்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழகம் வழக்கு தொடர்ந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் கோரிக்கையை மத்திய அரசு சட்டரீதியாக பரிசீலிக்கும். மேகதாது அணை கட்டுமான பணியை நிறுத்தும் பேச்சுக்கே […]