தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மேகதாதுவில் அணை கட்டப்படுகிறதா என ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் ஜூன் 16ல் கலைத்தது. இதனால், தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
டெல்லி சென்றபோது மேகதாதுவுக்கு ஒப்புதல் தருவதாக அமைச்சர்கள் கூறினார்கள் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு, தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,கர்நாடக மாநில முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி, எடியூரப்பா ஆகியோர், அணை கட்டியே தீருவோம் என்று கூறி வந்தனர்.அவர்களைத் தொடர்ந்து, கர்நாடகாவின் புதிய முதல்வராக பதவியேற்ற பசவராஜ் பொம்மை அவர்களும் மேகதாது அணை விவகாரத்தில்,கர்நாடக அரசு பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை.கண்டிப்பாக அணை […]
நாளை மறுநாள் டெல்லி செல்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். கர்நாடகாவில் மேகதாதுவில் அணை கட்ட அம்மாநில அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கர்நாடகா அரசின் இந்த முடிவிற்கு, தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அனைத்துக் கட்சிக் குழு, மத்திய நீர்வளத்துறை அமைச்சரை இன்று பிற்பகல் சந்தித்து மேகதாது அணை தொடர்பாக பேசவுள்ளனர். இந்நிலையில், தமிழக சட்டமன்ற கட்சி பிரதிநிதிகள் குழுவை தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் வரும் 18-ம் தேதி […]
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் அவர்கள் அறிவித்து இருப்பதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: மேகதாதுவில் அணை கட்டப்படும்: உச்ச நீதிமன்றத்திற்கு இணையான காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை முற்றிலும் அவமதிக்கும் வகையிலும், இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள […]
மேகதாது அணை தொடர்பாக,நாளை மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று இரவு டெல்லி பயணம். கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருக்கு குடிநீர் வழங்க ஏதுவாகவும், மின் உற்பத்திக்காகவும் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே 9,000 கோடி ரூபாய் செலவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கொண்டு வந்தது.அணை கட்டும் திட்டத்துக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து இந்த வழக்கு […]