மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் தேவை என்று ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதனையடுத்து,பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி கூறுகையில்,”மேகதாது விவகாரத்தில் முதலமைச்சர் தலைமையில் அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஒன்று திரண்டு நிற்க வேண்டும்.மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா தீவிரமாக இருக்கிறது. தேவைப்பட்டால் தமிழ்நாடு ஒரே குரலில் எழுந்து […]
மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, தடையை மீறி பாஜகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும் என கோரி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தஞ்சை ஜூபிடர் தியேட்டர் – பனகல் பில்டிங் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக பாஜக மூத்த தலைவர் கணேசன் கலந்து […]
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சி சட்டப்படி தடுக்கப்படும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட கட்டுமான பொருட்களை குவிப்பதாக வந்த செய்தியின் அடிப்படையில் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கை எடுத்து, மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா..? என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய […]
மேகதாது அணை கட்டியே தீருவோம் எனும் கர்நாடக அரசின் முடிவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்மையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மேகதாது அணை தொடர்பாக கடிதம் எழுதி இருந்தார். இதற்கு பதில் அளித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்கள் நலன் கருதி மேகதாது திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த மேகதாது அணை கட்டுவது தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்பொழுது அம்மா மக்கள் […]
மேகதாது மற்றும் மார்க்கண்டேய நதி அணை விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து பேசவுள்ளதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். கர்நாடகா தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டி உள்ளது தொடர்ந்து சர்ச்சையை எழுப்பி வரும் நிலையில், தமிழக விவசாயிகள் இதனால் பாதிப்படையும் அச்சம் உள்ளதால் இது குறித்து நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு […]
மேகதாது அணை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வதற்காக இன்று மத்திய அமைச்சருடன் அமைச்சர் துரைமுருகன் பேச்சுவார்த்தை. கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருக்கு குடிநீர் வழங்க ஏதுவாகவும், மின் உற்பத்திக்காகவும் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே 9,000 கோடி ரூபாய் செலவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கொண்டு வந்தது. அணை கட்டும் திட்டத்துக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இதனையடுத்து, காவிரியில் மேகதாது […]
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான எந்த ஆரம்பக்கட்ட பணிகளையும் கர்நாடகா மேற்கொள்ள கூடாது. காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 12 வது ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த கூட்டத்தில் இந்த மாதத்திற்கான நீர் திறப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. காவிரியில் இருந்து தேவைப்படாத உபரி நீரை மட்டும் திறந்து விட்டுவிட்டு, தேவைப்படும் போது, கணக்காக கர்நாடக அரசு காட்டுகிறார்கள் என்று குற்றசாட்டியுள்ளனர். மேலும், மேகதாதுவில் அணை […]
காவிரியில் மேகதாது அணை திட்டம் தொடங்கப்படும் என்ற கர்நாடக முதாவார் எடியூரப்பாவின் அறிவிப்பிற்கு கேப்டன் விஜயகாந்த் கண்டனம். பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மத்திய அரசு அனுமதி அளித்ததும் காவிரியில் மேகதாது அணை திட்டம் தொடங்கப்படும் என தெரிவித்தார். மேகதாது அணை கட்டுமானம் கர்நாடகாவின் மிக முக்கியமான திட்டம், மேகதாது அணை திட்டத்தை திட்டத்தை எதிர்த்து பசுமை தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு அளித்த கோரிக்கை ஏற்கப்படவில்லை என தெரிவித்தார். கார்நாடக முதல்வர் எடியூரப்பாவின் இந்த […]