தமிழகத்தில் வரும் 24-ஆம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது என அமைச்சர் தகவல். கொரோனா பூஸ்டர் இலவச தடுப்பூசி திட்டத்தை இன்று சென்னையில் தொடங்கி வைத்தார் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதன்படி, இந்தியா முழுவதும் இன்று முதல் 75 நாட்களுக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் இனி ஒரு வாரம் விட்டு தான் தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார். அதன்படி, வரும் […]
தமிழ்நாட்டில் 1 லட்சம் இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் தற்போது சற்று அதிகரித்து வருகிறது.உத்தரபிரதேசம்,மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகின்றன.இதில்,தமிழகத்திலும் தொற்று சற்று அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய சுகாதார அமைச்சகம், மாநில அரசுகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில்,பிஏ4, பிஏ5 வகை தொற்று தமிழகத்தில் பரவ தொடங்கியுள்ளதாகவும், […]
தமிழ்நாட்டில் 99 லட்சத்து 56 ஆயிரத்து 665 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல். நாடு முழுவதும் கொரோனா பரவல் தற்போது சற்று அதிகரித்து வருகிறது. உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், தமிழகத்திலும் தொற்று சற்று அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய சுகாதார அமைச்சகம், மாநில அரசுகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி […]
மே 8-ஆம் தேதி சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் 1 லட்சம் இடங்களில் நடத்தப்பட உள்ளது என அறிவிப்பு. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் வரும் 8ம் தேதி மீண்டும் மெகா சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். அதன்படி, ஒரு லட்சம் இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும். முதல் மற்றும் 2வது டோஸ் […]
இனி வாரந்தோறும் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது என்று தமிழக பொது சுகாதாரத்துறை அறிவிப்பு. தமிழகத்தில் வாரந்தோறும் நடத்தப்பட்டு வந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இனி நடத்தப்படாது என்று தமிழக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதற்கேற்ப தேவைப்பட்டால் அந்தந்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மெகா தடுப்பூசி முகாமை நடத்தலாம் என்றும் தமிழகத்தில் இதுவரை 27 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், கொரோனா பரவல் குறைந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், […]
கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை குறைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாமை வார இறுதி நாட்களில் தமிழக அரசு நடத்தி வருகிறது. இந்த நிலையில், இன்று சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 23-ஆவது கொரோனா தடுப்பூசி முகாம் துவங்கியுள்ளது. சென்னையில் மாலை 7 மணி வரை 1,600 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் […]