இன்று இந்திய வடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இன்று அதிகாலை 1.06 மணிக்கு மணிப்பூர் மொய்ராங் பகுதியில் 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அசாமின் தேஜ்பூர் பகுதியில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது அதிகாலை 2.04 மணிக்கு நிகழ்ந்துள்ளது. பின்னர் அதிகாலை 4.20 மணியளவில் மேகாலயாவின் மேற்கு காஜி பகுதியில் 2.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு […]
மேகலயாவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேகாலயா மாநிலத்தில மேற்கு காஷி பகுதியில் இன்று அதிகாலை 1.13 மணியளவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து தெரிவித்துள்ள தேசிய புவியியல் மையம் இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ரிக்டராக பதிவாகியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே வடமாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது அப்பகுதி மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேகாலயாவில் புதியதாக 11 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது .நேற்று மட்டும் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் .இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 913 ஆக அதிகரித்துள்ளது .இதுவரை 282 குணமடைந்துள்ளனர் .மாநிலமுழுவதும் 626 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
1988ஆம் ஆண்டு கணக்கு பாடம் ஏற்படுத்திய மனக்கசப்பில் பள்ளிப்படிப்புக்கு முழுக்கு போட்ட 50 வயதான எம்.எஸ்.லாகிண்டீவ் தற்போது 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று மேற்கொண்டு கல்லூரி படிப்பை தொடர ஆசைப்படுவதாக தெரிவித்தார். மேகலயா மாநிலத்தில் 1988ஆம் ஆண்டு கணக்கு பாடம் கடினமாக இருந்ததால், எம்.எஸ்.லாகிண்டீவ் தனது பள்ளிப்படிப்பை நிறுத்தி கொண்டார். அதன் பின்னர் 2008ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது மீண்டும் பள்ளி படிப்பை தொடர நினைத்து, ரி-போய் மாவட்டத்தில் உள்ள பலவன் […]
மேகாலயா சுரங்கத்திற்குள் கடந்த 40 நாட்களாக சிக்கி தவித்த சுரங்க தொழிலாளர்களில் ஒருவர் உடல் மீட்கபட்டது. மேகாலயா மாநிலத்தின் கிழக்கு ஜைண்டியா மாவட்டத்தில் உள்ளது லும்தாரி கிராமம்.இந்த கிராமத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் கடந்த மாதம் 13–ந்தேதி திடீரென வெள்ளம் வந்து சுரங்கத்துக்குள் வெள்ளநீர் புகுந்தது. இந்த வெள்ளத்தில் சுரங்கத்திற்குள் பணியாற்றிக்கொண்டு இருந்த 15 தொழிலாளர்களும் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டனர். இந்நிலையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க கடற்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை உள்ளிட்ட வீரர்கள் கடந்த மாதத்துக்கும் மேலாக முயற்சி செய்து வந்தனர்.இந்நிலையில் […]
மேகாலயாவில், 20 நாட்களாக சுரங்கத்திற்குள் சிக்கித் தவித்து வரும் தொழிலாளர்களை மீட்பதற்காக சுரங்கத்தில் உள்ள நீரின் அளவை குறைக்கும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. மேகாலயா மாநிலம் கிழக்கு ஜெயின்டியாவில் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கத்திற்குள், 15 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் கடந்த 20 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் காரணமாக 370 அடி ஆழமுள்ள சுரங்கத்தில் நீர் புகுந்துள்ளதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தண்ணீரை வெளியேற்ற பயன்படும் […]