கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, டெல்லியில் நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து மேகதாது அணை கட்ட அனுமதி வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார். மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக உறுதியாக உள்ளது. அதேபோல மேகதாதுவில் அணை கட்டவிடாமல் எப்படியும் தடுப்போம் என தமிழக அரசும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக மேகதாது அணைக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. […]
மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி அரசும் எதிர்ப்பு. கர்நாடகாவில் மேகதாதுவில் அணை கட்ட அம்மாநில அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கர்நாடகா அரசின் இந்த முடிவிற்கு, தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகா அரசின் முடிவுக்கு புதுச்சேரி அரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, மேகதாது அணை கட்டுவதால் காரைக்கால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அணை கட்டுவதை தடுக்கக்கோரி பிரதமருக்கு கடிதம் எழுத முதல்வர் ரங்கசாமி தலைமையிலான […]
தமிழக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக அண்மையில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, கர்நாடக அரசின் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் டெல்லி சென்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களை சந்தித்து […]
கர்நாடகா முதல்வர் எடியூரப்பா அவர்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசு மேகதாது அணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், ஏற்கனவே தமிழக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணையாக இருந்தாலும், மற்ற எந்த அணையாக இருந்தாலும், கட்டுவதற்கு அனுமதி வழங்க முடியாது. தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது. தமிழகத்திற்கு எந்த நிலையிலும், தண்ணீர் பாதிப்பு ஏற்படாத வகையில் தான் எந்த நடவடிக்கையும் இருக்க […]