காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர்பாக,முன்னதாக தமிழக முதலமைச்சர், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்சினை குறித்து தமிழ்நாட்டின் நிலைபாட்டை விளக்கி, நமது மாநில விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரைத் தொடர்ந்து,தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், அண்மையில் மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்து,மேகதாது அணை பிரச்சினையில் மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் […]