இன்று பிரதமர் மோடியை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்கவுள்ளார். இவர்களின் சந்திப்பு டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் 3-வது முறையாக முதலமைச்சராக ஆன பிறகு பிரதமர் மோடியை சந்திப்பது இதுவே முதல் முறை. இவர்களின் சந்திப்பின் போது டெல்லி வன்முறை தொடர்பாக ஆலோசிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் மோடி தனது சொந்த மக்களவை தொகுதியான வாரணாசிக்கு சென்றதால் அந்த நிகழ்ச்சியில் […]