ரயில் நிலையத்தில் இறந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தையை தனது டிரஸ்ட் மூலம் பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் தத்தெடுத்துள்ளார். சமீபத்தில் தாய் இறந்தது அறியாமல் அவரை எழுப்பும் 2வயது குழந்தையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது. ஆம் குஜராத் மாநிலத்திலிருந்து பீகாரிலுள்ள மோசாபூருக்கு வந்த புலம்பெயர்ந்த தொழிலாளியான பெண்மணி ஒருவர் பசியின் காரணமாக உயிரிழந்தார். அதனை அறியாத அந்த பெண்ணின் 2வயது குழந்தை உடம்பில் மூடப்பட்டிருந்தன போர்வையை மாற்றி, தன்னுடைய அம்மாவை எழுப்ப முயற்சித்தது. […]