உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஆண்டுதோறும் களைகட்டும் சித்திரை திருவிழா, மீனாட்சி அம்மன் திருக்கல்யாண தேரோட்டம் போன்றவை உலக புகழ் பெற்றவை. இதனிடையே நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் நிறைவடைய இருந்த ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இந்த ஊரடங்கில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி […]