கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பாதிப்பு மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த நோயின் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து இந்த நோயின் பாதிப்பு மற்ற நாடுகளிலும் பரவி வருகிற நிலையில், அனைத்து நாடுகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா இந்தியாவில் பரவி உள்ளதால் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் வணிக வளாகங்கள், கோவில்கள், தேவாலயங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. […]