கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், வருடந்தோறும் கோலாகலமாக நடைபெறக்கூடிய மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று பக்தர்கள் இன்றி நடைபெற்றுள்ளது. நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்படுவதுடன், நாளுக்கு நாள் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்து கொண்டே இருக்கின்றனர். கொரோனா தொற்றை தடுப்பதற்காக ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், […]