“7.5% இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் ஆளுநர் முடிவு வரும் வரை மருத்துவ கலந்தாய்வு தொடர்பாக எந்த முடிவும் வெளியிடப்படாது” என்று உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி மதுரையை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவரது வழக்கில்,அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்களில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து சட்டத்தை 2020-2021 ஆம் கல்வி ஆண்டிலே அமல்படுத்த […]