மருத்துவத்துறை காலி பணியிடங்கள் கண்டறியப்பட்டு நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு. திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவத்துறையில் நவம்பர் 15-க்குள் புதிதாக 4,038 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்துள்ளார். தற்கொலைக்கு அதிக பயன்படுத்தப்படும் சாணி பவுடர் விற்பனைக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மருந்து கடைகளில் தனி நபராக வந்து கேட்பவர்களுக்கு சாணி பவுடர், எலி பேஸ்ட் தரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இனி வாரந்தோறும் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது என்று தமிழக பொது சுகாதாரத்துறை அறிவிப்பு. தமிழகத்தில் வாரந்தோறும் நடத்தப்பட்டு வந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இனி நடத்தப்படாது என்று தமிழக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதற்கேற்ப தேவைப்பட்டால் அந்தந்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மெகா தடுப்பூசி முகாமை நடத்தலாம் என்றும் தமிழகத்தில் இதுவரை 27 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், கொரோனா பரவல் குறைந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், […]