எம்.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு. அகில இந்திய ஒதுக்கீடு தொடர்பான எம்.டி, எம்.எஸ், எம்.டி.எஸ் மாணவர் சேர்க்கையில் 27% இடஒதுக்கீட்டை ஓ.பி.சி பிரிவினருக்கு அளிக்க சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, பல் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும், உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கிடைத்த பிறகே கலந்தாய்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 2ஆம் கட்ட மருத்துவ கலந்தாய்வு வரும் 4 ஆம் தேதி தொடக்கம். மருத்துவ படிப்புக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு ஜனவரி 4-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 4-ஆம் தேதி மருத்துவ கலந்தாய்வு நடைபெறுகிறது. 7.5% இடஒதுக்கீட்டில் இன்னும் 12 இடங்கள் உள்ள நிலையில், 4ஆம் தேதி அரசு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. ஜனவரி 5ஆம் தேதி பொதுப்பிரிவு மாணவர்களுக்கும் மருத்துவ கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது என்பது […]
சென்னையில் இன்று சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு நடைபெறுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 9 மணிக்கு சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு துவங்கி உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர். ஏற்கனவே கடந்த 18 ஆம் தேதியே எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கிய நிலையில் 18ஆம் தேதி முதல் நேற்று வரையிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வு […]
மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான கடைசி நாளான இன்று இதுவரை 39,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பத்துள்ளதாக மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.அதில் வெற்றி பெற்றவர்கள் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் .அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்குமான கலந்தாய்வில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு 3-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது […]