தமிழகத்துக்கு 7 கல்லூரிகள் வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை. கடலூர் மற்றும் மருத்துவ கல்லூரி இல்லாத 6 மாவட்டங்களில் 7 மருத்துவ கல்லூரிகளை மத்திய அரசு ஒதுக்க, தேவையான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். மத்திய அரசின் சார்பில் இதுவரை மூன்று கட்டங்களாக 157 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் உட்பட மொத்தம் 93 மருத்துவக் கல்லூரிகள் […]
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அவகாசம் அக்.6ம் தேதி வரை நீட்டிப்பு. MBBS, BDS படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் அவகாசம் அக்டோபர் 6ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. MBBS, BDS படிப்புகளில் சேர இதுவரை 35,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வின் முடிவுகள் வெளியாகின. இந்த சமயத்தில் தமிழகத்தில் உள்ள […]
மேலும் 6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கான அனுமதியை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம் என அமைச்சர் பேட்டி. டெல்லி சென்றுள்ள மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ஆயுஷ்துறை அமைச்சர் சர்பானந்த சோன வால் ஆகியோரை சந்தித்து மருத்துவக் கல்லூரி, சித்த மருத்துவ பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக வலியுறுத்தி, அதற்கான மனுவும் அளித்தார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், […]
தஞ்சை:ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் காசர்கோட்டில் உள்ள பேருந்து நிலையம் அருகே ஐடியல் என்ற உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட ஷவர்மாவை வாங்கி சாப்பிட்ட, கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இதனையடுத்து,கேரளாவில் காசர்கோட்டிலுள்ள அனைத்து ஷவர்மா கடைகளையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே, ஐடியல் உணவக மேலாளர் அனஸ், ஊழியர் சந்தேஷ் ராய் என்பவர் […]
தேசிய மருத்துவ ஆணையம் அனுப்பிய சுற்றறிக்கையை குழப்பத்திற்கு காரணம் என சம்ஸ்கிருத உறுதிமொழி விவகாரத்தில் மருத்துவக் கல்வி இயக்குநர் விளக்கம். மதுரை மருத்துவ கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள கல்லூரி முதல்வர் ரத்னவேல் மற்றும் மாணவர்களிடையே மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு விசாரணை மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சுற்றறிக்கையால் வந்த குழப்பதால் தான் சமஸ்கிருத மொழியில் உறுதி மொழி ஏற்கப்பட்டது. NMC சுற்றறிக்கை பற்றி விளக்கம் பெறாமல் […]
கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் கூட்டக்கூடாது என மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவு. தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்தார். மருத்துவ கல்லூரி வளாகத்தில் பெரிய அளவில் மாணவர்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அனைத்து சுகாதார பணியாளர்களும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பெருமளவில் குறைந்து, பல்வேறு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் கொரோனா […]
மக்கள் வரிப்பணம் 336 கோடி ரூபாய் உருமாறும் கோலம் இது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூ. 336 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகின்றன. இதனிடையே மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தின் முன்பகுதி கான்க்ரீட் தளம் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் […]
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் ராமநாதபுரம், திருப்பூா், நீலகிரி, திருவள்ளூா், கிருஷ்ணகிரி, விருதுநகா், திண்டுக்கல், நாமக்கல், நாகப்பட்டினம், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. 11 புதிய மருத்துவக் கல்லூரிக்கு மொத்தம் ரூ. 3,575 கோடி செலவிடப்பட உள்ளது. இதில் மத்திய அரசு தனது பங்காக 60 சதவீத நிதியையும் (ரூ. 2, 145 கோடி) , தமிழக […]
நாமக்கல்லில் ரூ.338 கோடியில் புதிய மருத்துவக் கல்லூரி கட்டப்பட உள்ளது .இந்நிலையில் அங்கு அமையவுள்ள புதிய மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி.இந்த நிகழ்ச்சியில் ,மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் ,துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதிமுக அரசு சிறுபான்மையினருக்கு அரணாக விளங்குகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார் . ராமநாதபுரத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க கச்சத்தீவை மீட்க தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்துகிறோம். அதிமுக அரசு சிறுபான்மையினருக்கு அரணாக விளங்குகிறது. ஏழை எளிய மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.ராமநாதபுரம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மருத்துவக் கல்லூரியை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.புதிய மருத்துவக் கல்லூரிகள் மூலம் […]
11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் அமையவுள்ள மருத்துவக்கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார் .நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,அமைச்சர்கள் பங்கேற்றனர். அப்பொழுது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், வளர்ந்த நாடுகளுக்கு இணையாக மருத்துவ வசதி பெறும் எண்ணத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது . 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசிடம் ஒப்புதல் […]
அரியலூர் ,கள்ளக்குறிச்சி ஆகிய இரு மாவட்டங்களில் புதியதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்க அனுமதித்து உள்ளதால் தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து உள்ளது. அரியலூர் ,கள்ளக்குறிச்சி ஆகிய இரு மாவட்டங்களில் புதியதாக மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். முதலில் தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் என புதிய 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.இதன் […]
ஏற்கனவே தமிழகத்தில் 9 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்து இருந்தது. இந்நிலையில் தற்போது அரியலூர் ,கள்ளக்குறிச்சி ஆகிய இரு மாவட்டங்களில் புதியதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. சமீபத்தில் அரியலூர் ,கள்ளக்குறிச்சி கடலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் புதியதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியிருந்தார். இந்நிலையில் அரியலூர் ,கள்ளக்குறிச்சி ஆகிய இரு மாவட்டங்களில் புதியதாக […]
தமிழகத்தில் புதிதாக 9 மருத்துவக் கல்லூரிகள் அமையவுள்ளது. ஒருபந்தில் 9 ரன் எடுப்பவர் முதல்வர் பழனிசாமி என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். முதலில் தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் என புதிய 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.இதன் பின்னர் 3 மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. அதன்படி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நகை ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க பட உள்ளது. […]
தமிழகத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட 6 மருத்துவ கல்லூரிகளுக்கு முதற்கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மருத்துவ வசதி குறைவாக உள்ள மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.பின்பு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்திற்கு புதிதாக அறிவிக்கப்பட்ட […]
தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் புதிதாக 75 மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மருத்துவ வசதி குறைவாக உள்ள மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.பின்பு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.அதில் தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் புதிதாக […]