வடகிழக்கு பருவமழையை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று 1,000 இடங்களில் மருத்துவ முகாம்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் சற்றுமுன் தொடங்கியுள்ளது. காய்ச்சல், இருமல், சளி போன்ற பிரச்னைகள் இருப்போர் இந்த முகாமிற்கு சென்று பயன்பெறலாம். ஏற்கனவே, டெங்கு பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், கொசுக்களை அழிக்கும் நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை செயல்படுத்தி வருகிறது. அதன் […]
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியுள்ள நேரத்தில் பருவகால நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்த நடவடிக்கைகள் குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு தகவல்களை தெரிவித்தார். அவர் கூறுகையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 20ஆம் தேதி துவங்கி, 4,5 நாட்களை கடந்து தற்போது பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. ஒவ்வொரு பருவமழை காலத்தின் போதும், மலேரியா, டெங்கு, சேத்துப்புண், சளி, […]
நாளை சென்னை முழுவதும் 200 வார்டுகளிலும் 200 மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தமிழக அறிஞர் என்று சொல்லப்படும் நெடுஞ்செழியன் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள […]
தமிழகத்தில் சென்னை உட்பட 1,000 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் பல இடங்களில் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சமீப நாட்களாக டெங்கு, இன்புளுயன்சா போன்ற காய்ச்சல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் சென்னை உட்பட 1,000 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. சென்னையில் மட்டும் 100 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது.