Tag: medical

நிலக்கடலை சாப்பிட்டால் மாரடைப்பு வருமாம்? ஓர் அதிர்ச்சி தகவல்!

நமக்கு எளிதாக கிடைத்திடும் உணவுப்பொருள் நிலக்கடலை. இதில் பல்வேறு சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன என்பதால் கர்பிணிகள் சாப்பிடலாம்,சர்க்கரை நோயைத் தடுக்க்கும், கொழுப்பைக் கரைக்கும்,மாரடைப்பு வராமல் தடுத்திடும் என்று ஏகப்பட்ட நன்மைகளை பட்டியலிடுவார்கள்.ஆனால் இதற்காக, தொடர்ந்து நிலக்கடலையை எடுப்பதும் ஆபத்தானது. அளவில்லாமல் நிறைய நிலக்கடலை சாப்பிட்டால் அது எடையை அதிகரித்துவிடும். சாதரணமாக வறுத்த கடலையில் 166 கலோரி இருக்கும் இதே எண்ணெயில் வறுத்தால் 170 கலோரிகள் அதிகரித்திருக்கும். இதனை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் போது கொழுப்பு அதிகரித்து உடலில் பாதிப்பை […]

health 5 Min Read
Default Image

வெண்டைக்காயின் மருத்துவ பயன்கள்..!!!

பிஞ்சு வெண்டைக்காயிலுள்ள வேதிச்சத்துக்கள் ரத்தம் உறைதல் மற்றும் ரத்தக்கட்டிகளை தடுக்கும் தன்மை உடையதால் அடிக்கடி உணவுடன் சேர்த்து உட்கொண்டுவர மூளை செயலிழப்பு சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கலாம். நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த, ருசியான காய்களில் முதலிடத்தை வகிப்பது வெண்டைக்காய். வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளுமையாக வைக்கிறது. வெண்டைக்காயில் உயர்தரமான பாஸ்பரசும்,நார்ப்பொருளும் உள்ளன. இதில் உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது. […]

medical 4 Min Read
Default Image

உடலுக்கு தண்ணீர் தேவை என்று எப்படி தெரிந்து கொள்வது?

சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று லிற்றர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவம் சொல்கிறது. ஆனால் இன்றைய வாழ்க்கைமுறை ஒரு லிற்றர் தண்ணீர் குடிக்கவே சிரமப்படும் அளவிற்கு நம்மை மாற்றிவிட்டது. நம் உடலுக்கு தேவையான அளவிற்கு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் சில அறிகுறிகளைக் கொண்டே கண்டுபிடித்துவிடலாம். நம்முடைய சருமம் வறண்டு காணப்படும். அடிக்கடி அரிப்பு, அலர்ஜி ஏற்படும். முகத்தில் பருக்கள் தோன்றும். உதடுகள் உலர்ந்து தோல் பிரிந்து வரும். சிலருக்கு உதடுகள் வெடித்து புண் […]

medical 6 Min Read
Default Image

நகம் கடித்தால் மன நோயா??

பலருக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறது. இதனை சாதாரணமான ஒன்றாகதான் நினைக்கிரோம் ஆனால் அது ஒரு வலையான மன நோய் என் கூறப்படுகிறது. நகம் கடிக்கும் பழக்கும் குழந்தைப் பருவத்தில் தொடங்கி விடுகிறது. பின்னர் பருவ வயதில் இப்பழக்கம் தானாய் மறைந்து போகும்.     குறிப்பிட்ட சிலரால் இப்பழக்கத்திலிருந்து விடுபட முடிவதில்லை. காரணமில்லாத அச்சம், தவறான எண்ணங்கள் மனதில் எழுவதால் இவ்வாறு நகம் கடிக்கும் பழக்கம் ஒருவருக்கு தொடரலாம்.    நகம் கடித்தல் மன அழுத்தத்தின் […]

medical 3 Min Read
Default Image

உடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர்!

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கோடைகாலத்தில் உடலை குளிர்ச்சி அடைய செய்யும் மருந்து மற்றும் உணவுகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.உடலில் உஷ்ணம் அதிகமாகும்போது சிறுநீர்தாரையில் எரிச்சல், ஆசனவாயில் எரிச்சல், வயிற்று வலி போன்றவை ஏற்படும். இப்பிரச்னைகளுக்கு நாவல் பழம், பருப்பு கீரை, இளநீர் ஆகியவை மருந்தாகி பயன்தருகிறது. பல்வேறு மருத்துவ […]

medical 3 Min Read
Default Image

உங்களுக்கு உள்ளங்கைகளில்மட்டும் வியர்வை மிகுதியாகவருமா?

ஒரு சில பேருக்கு உள்ளங்கைகளிலும் உள்ளங்கால்களிலும் வேர்த்துக்கொண்டேயிருக்கும். இதனால் அவர்களின் வேலை பாதிப்படையும்.இதை குணப்படுத்த  எளிய மருத்துவம் உள்ளது.  கத்தரிக்காயை சமைப்பதற்கு அதை வெட்டி தண்ணீரில் போட்டுவைப்பார்கள்.அதில் கைகளைமட்டும் ஒரு ஐந்தாறுமுறை  நனைக்க வேண்டும்.  அவ்வாறு செய்தால் வியர்வையானது  ஒரு சில நாளில் நின்றுவிடும். 

medical 1 Min Read
Default Image

சளி, இருமலா? இனி கவலை வேண்டாம்!

மழைக்காலம் வந்துவிட்டாலே, பருவ மாற்றத்தின் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என பலரும் இருமல், சளியின் பிடியில் சிக்கிக்கொள்கிரார்கள். மருத்துவரின் ஆலோசனையைப் பெறாமலேயே, விளம்பரங்களில் காட்டப்படும் மாத்திரைகளையும், காஃப் சிரப்களையும் வாங்கி பயன்படுத்துகின்றனர். இருமல், சளிக்கு இப்படி நாம் பயன்படுத்தும் பிரபல மருந்துகளில் பி.பி.ஏ. என்ற வேதிப்பொருள் கலந்திருப்பதால், அதைத் தவிர்த்து, இந்த பாட்டி வைத்தியத்தை ஒரு முயற்சி செய்து பாருங்கள். செய்வதும் எளிது, உடலுக்கும் நல்லது, விளைவுகளும் இல்லாதது.  சில துளசி இலைகளை அலசி […]

medical 3 Min Read
Default Image

டெங்கு காய்ச்சலும்! சித்த மருத்துவமும்!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன. இந்நிலையில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. பொதுவாக மக்கள் தொகையில் ஒரு சதவீத பேருக்கு அன்றாடம் காய்ச்சல் ஏற்படுவது வழக்கமான ஒன்று ஆனால் மழைக் காலங்களில்  காய்ச்சலின் அளவு இரண்டு சதவீதமாக அதிகரிக்கிறது.இவ்வாறு வரும் காய்ச்சல் அனைத்தையும் டெங்கு காய்ச்சல் என கூறமுடியாது.டெங்கு காய்ச்சல் பொதுவாக கொசுக்களின் மூலமாகதான் பரவுகிறது. கடுமையான உடல் வலியும், உடலில் உள்ள […]

medical 8 Min Read
Default Image

நெய் உடலுக்கு நல்லதா?

பொதுவாக பலர் நெய்யை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஏனென்றால்நெய்வெறும்கொழுப்புமட்டும்நிறைந்தஉணவு,ரத்தக்கொழுப்பை உயர்த்தும்குணம்உடையது என்பதே அவர்களின்எண்ணமாக இருக்கும். ஆனால் உண்மையில் நெய் சாப்பிட்டால், கொலஸ்ட்ராலின் அளவு குறையும். நெயின் நன்மைகள்: உடல் சோர்வை தடுத்து புத்துணர்ச்சியை தரும். நெய் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். கண் பார்வையை அதிகரிக்கவும். குடல் புண்கள் ஆறுவதுடன், மலச்சிக்கல் நீங்கும்..  நெயின் மருத்துவ குணங்கள்: நெய்யில் கலோரிகள் அதிகம் இருப்பது உண்மை தான். ஆனால் அளவாக சாப்பிட்டால், அனைத்துமே நல்லது தான். […]

Food 3 Min Read
Default Image

கால்சியம் குறைபாடு உள்ளதா? என்பதை தெரிந்து கொள்வது எப்படி?

கால்சியம் உடலில் குறைவாக இருந்தால் பல் மற்றும் எலும்பு பிரச்சனைகள் வரும் என்பது மட்டும் தான் தெரியும். ஆனால் அதையும் மீறி வேறு சில பிரச்சனைகளையும் சந்திக்கக்கூடும். எலும்புகளின் வலிமைக்கும், பற்களின்  ஆரோக்கியத்திற்கும் கால்சியம் சத்து மிகவும் இன்றியமையாதது என்று தெரியும். அதே சமயம் தசைகள் மற்றும் நரம்புகளின் சீரான இயக்கத்திற்கும் கால்சியம் சத்து முக்கியமானது. உங்களுக்கு நகம் எளிதில் உடைகிறதா? அப்படியெனில் உங்களுக்கு கால்சியம் சத்து குறைவாக உள்ளது என்று அர்த்தம். நகங்கள் உடைவது மட்டுமின்றி, நகங்களில் தோல் […]

medical 5 Min Read
Default Image

வாய்ப்புண் விரைவில் குணமடைய எளுமையான வழி.

சமீபத்தில் உங்கள் வாயின் கொப்புளங்கள் உண்டாகி அவதிப்பட்டீங்களா? அப்படி உண்டாவதைத்தான் ‘வாய்ப்புண்’ (MOUTH ULCER) என நாம் அழைக்கிறோம். உங்கள் உடம்பு சம நிலையற்று மலச்சிக்கல், அசிடிட்டி, சத்து பற்றாக்குறை, அல்லது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் வர வாய்ப்பாகவும் இருக்கிறது. வாய்ப்புண் தோன்ற மற்ற சில முக்கிய காரணங்களாக உடல் உஷ்ணமும், அதிகம்      புகைப்பிடிக்கும் பழக்கம்மும், மனஅழுத்தமும், உங்கள் பற்களை பாதுகாக்க தவறுவனவும் இருக்கிறது. இந்த புண்ணால் ஏற்படும் வலிக்கு எத்தகைய மருந்துகளும் வேண்டியதில்லை என்கின்றனர். […]

medical 6 Min Read
Default Image

கண்நோயை குணப்படுத்தும் நந்தியாவட்டை பூ!

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கண்நோய்களை சரிசெய்ய கூடியதும், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவல்லதும், புண்களை ஆற்ற கூடியதுமான நந்தியாவட்டையின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். நந்தியாவட்டை அடுக்கான மலர்களை உடையது. வெள்ளை நிறப்பூக்களை உடைய இது கண்நோய்க்கு மருந்தாகிறது. பூக்கள் கண் எரிச்சலை, கண் சிவந்த நிலையை போக்குகிறது. பற்களை […]

medical 7 Min Read
Default Image

நீங்கள் மாத்திரைகளை இரண்டாக உடைத்து சாப்பிடுபவர்களா?

மாத்திரைகளை இரண்டாக உடைப்பது சரியா? சின்ன சின்ன உடல் உபாதைகள் ஏற்பட்டாலே மருத்துவமனைக்குச் செல்வதும், மாத்திரைகளை விழுங்குவதும் இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. விழுங்கும் மாத்திரைகளை பெரிதாக இருக்கிறதென்றோ அல்லது டோசேஜ் காரணத்தை சொல்லியோ இரண்டாக உடைத்து சாப்பிடுபவர்கள்.இந்த செயல் தவறானது. மாத்திரைகளை முழுதாக சாப்பிடுவது தான் நல்லது. அதை இரண்டாக உடைப்பது தவறான செயல். அப்படிச் செய்வதால் சில நேரங்களில் எடுத்துக் கொள்ளக்கூடிய டோசேஜ் அளவுகள் மாறுபடும். மருத்துவரிடம் ஆலோசனை : மாத்திரைகளை இரண்டாக உடைக்க வேண்டிய சூழல் […]

medical 4 Min Read
Default Image

காதல் இல்லாத உலகம் என்னவாகும்?

இன்றைய இயந்திர வாழ்க்கையில் ஸ்ட்ரெஸ் இல்லாத மனிதர்களே இல்லை. அது அளவுக்கு மீறும் போது அதிலிருந்து விடுபட மாத்தி ரைகள் எடுத்துக் கொள்வோரும் உண்டு. இச்சூழலில், `மன அழுத்தத்துக்காக கொடுக்கப்படும் மருந்துகள் பாலியல் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை’ என சமீபத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து மன அழுத்த மருந்துகள் எடுத்துக் கொள்வோருக்கு `எதிர்பாலரை பார்த்தாலே ‘பத்திக்கும்’ அடிப்படை வேதியியல் மாற்றம் கூட உண்டாவதில்லை’ என்ற புது கதயை பற்ற வைத்துள்ளார்கள் அமெரிக்க விஞ்யானிகள். நரம்பியல் மின்கடத்தியாக செயல்படும் […]

medical 6 Min Read
Default Image

தொப்பையை குறைக்க உதவும் இயற்கை மருந்து ஓமம்!!

ஓமம், மிளகு வகைக்கு 35 கிராம் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் பொருமல், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.   தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் […]

medical 5 Min Read
Default Image

பப்பாளி பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள்

1. பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். 2. பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.   3. பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.   4. நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய […]

Food 4 Min Read
Default Image

உடல் உஷ்ணத்தை போக்கும் மருத்துவம்

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். கோடைகாலத்தில் வெயில் காரணமாக உடல் உஷ்ணம் அதிகமாகும். இதனால் ஏற்படும் பிரச்னைகளை உளுந்து, பாசிப்பயறு, அரிசி போன்றவற்றை பயன்படுத்தி சரிசெய்யும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். பல்வேறு நன்மைகளை கொண்ட உளுந்து உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. பச்சை பயறு இரும்புச்சத்து, புரதச்சத்தை உள்ளடக்கியது. குளிர்ச்சி தன்மை கொண்ட இது நோயுற்றவர்களுக்கு மருந்தாகிறது. அரிசி உடலுக்கு குளிர்ச்சி […]

medical 7 Min Read
Default Image

செரிமானத்தை தூண்டும் மாங்காய்

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள அஞ்சறை பெட்டியில் வைத்திருக்கும் உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில் மாங்காய், மாவிலையின் நன்மைகள் குறித்து அறியலாம். மா பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. மாங்காய், மாம்பழம், இலை, பட்டை, பூ என அனைத்தும் மருந்தாகிறது. மாவிலைகள் தொண்டைக்கட்டு, வலி, வீக்கத்தை சரிசெய்யும். மாவிலைகளை காயவைத்து தேனீராக்கி குடிப்பதால் உள் உறுப்புகளில் ஏற்படும் அழற்சி, வீக்கம் குணமாகும். மாவிலையை புகையாக்கும்போது கொசுக்கள் […]

medical 5 Min Read
Default Image

இஞ்சி உடலுக்கு நஞ்சி?

இஞ்சி எரிப்புக் குணத்தை உடையது. உமிழ்நீர் சுரத்தலைத் தூண்டவல்லது. இதனால் உணவுப்பொருட்கள் எளிதில் விழுங்க உதவி புரிகின்றது. இஞ்சி இலைகளும், தண்டுகளும் வாசனை தரவல்லது. இஞ்சி கடுமையான கார ருசி உடையது. உலர்ந்த இஞ்சியே ‘சுக்கு’ (இலங்கையின் சில பகுதிகளில்: வேர்க் கொம்பு) என அழைக்கப்படுகிறது.  இஞ்சியையும், சுக்கையும் உபயோகிக்கும் போது, அதன் தோலை நீக்குவது மிக முக்கியமானது. இல்லை எனில் மாறாக வயிற்றுக் கடுப்பு ஏற்படும். இஞ்சியை சுத்தம் செய்யும்போது அதன் மேல் தோலை நன்றாக நீக்க வேண்டும் அதன் மேல் […]

medical 2 Min Read
Default Image

முத்தம் கொடுபதினால் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது@!! ஆய்வில் தகவல்

முத்தம் எனப்படுவது உங்கள் காதலை வெளிப்படுத்தும் ஒரு செயல் என்று தானே நினைத்துக் கொண்டிருப்பீர்கள்? அது உண்மைதான். ஆனால் அதையும் தாண்டி புனிதமான….. சில விஷயங்கள் அதில் பொதிந்துள்ளது. மருத்துவ ரீதியாகவும் முத்தம் சில பல ரசாயன மாற்றங்களை உங்கள் உடலுக்குள் நிகழ்த்துகிறது. அப்படியான முத்தத்தைப் பற்றி சில ஜாலியான தகவல்கள் இதோ. சராசரியாக ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 20,160 நிமிடங்கள் (இரண்டு வாரங்கள்) முத்தமிடுவதற்கு செலவு செய்கிறார்கள் என்கிறது ஒரு முத்தான ஆராய்ச்சி.  தாய்லாந்தைச் […]

medical 8 Min Read
Default Image