மருத்துவப் படிப்பில் பின் தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. எம்.பி.பி.எஸ், பல் மருத்துவம், மருத்துவ மேல்படிப்புகள் போன்றவற்றுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதலே இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என்று முன்னதாக மத்திய அரசு அறிவித்தது.அதன்படி, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதமும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதற்கிடையில்,மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 69% […]
மருத்துவ படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 % இடஒதுக்கீடு அனுமதிக்கத்தக்கது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டுமென திமுக,அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றன. மேலும்,இந்த இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தக்கோரி தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு […]
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவ படிப்பில் சேருவதற்காக கடந்த நவம்பர் 12ஆம் தேதி வரையிலும் விண்ணப்பித்திருந்தனர். தமிழகம் முழுவதிலும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு மருத்துவ கல்லூரிகளுக்கான காலி இடங்கள் உள்ளதாகவும், 2000 க்கும் அதிகமான பல் மருத்துவ படிப்புக்கான காலியிடங்கள் உள்ளதாகவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான தமிழக மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வருகிற இரு தினங்களில் […]
மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வுக்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வுக்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது. மேலும் காலி இடங்களாக உள்ள மருத்துவ மேல்படிப்பில் கலந்தாய்வு நடத்த கோரிய வழக்கு செப்டம்பர் 18ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.