ரஷ்யா: ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் அருகே உள்ள ஆற்றில் 4 இந்திய மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததாக அங்குள்ள அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (இன்று) தெரிவித்துள்ளனர். அதில் ஒரு பெண்ணமணியை மட்டுமே மீட்டுள்ளதாகவும் மீதம் உள்ள மூவரையும் தேடி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 18-20 வயதுடைய 4 மாணவர்கள் – 2 மாணவர்கள் மற்றும் 2 மாணவிகள் அருகிலுள்ள வெலிகி நோவ்கோரோட் நகரில் உள்ள நோவ்கோரோட் மாநில பல்கலைக்கழகத்தில் படித்து வந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு […]
தமிழ்நாட்டில் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான விதிகளில் தளர்வு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதாவது, முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்களது படிப்பை முடித்த பிறகு, 2 ஆண்டு அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற விதியில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்களது படிப்பை முடித்த பிறகு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கான காலம், 2 ஆண்டுகளாக இருந்ததை, தற்போது அதனை ஓர் ஆண்டாக குறைத்து தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை […]
முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு, வரும் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட படிப்புகளில் சேர நீட் தேர்வுக்கு மாற்றாக, நெக்ஸ்ட்(NExT) தேர்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்தாண்டு வழக்கம்போல் நீட் முதுநிலை தேர்வு நடத்தப்பட உள்ளது. ‘நெக்ஸ்ட்’ தேர்வு அமல்படுத்தப்படும் வரை மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு தொடரும் என சமீபத்தில் வெளியிடப்பட்ட மருத்துவ மேற்படிப்புகளுக்கான ஒழுங்குமுறையை தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், முன்னதாக மார்ச் […]
உக்ரைனில் இருந்து இந்தியா வந்த மருத்துவ மாணவர்களுக்கு இந்தியாவில் படிக்க அனுமதி இல்லை என மத்திய அரசு பதில் கூறியுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா நாட்டிற்கு இடையே போர் மூண்ட போது, உக்ரன் நாட்டில் பயின்று வந்த வெளிநாட்டு மாணவர்கள் அவராவர் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அதில் பெரும்பாலான எண்ணிக்கையில் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் இருந்தார்கள். அவர்கள் தங்களது படிப்பை பாதியில் விட்டு விட்டு இந்தியா வந்தார்கள். அவர்களுக்கு இங்கு இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் படிக்க […]
இந்திய மாணவர்கள் சீனாவில் உள்ள அந்தந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்குத் திரும்புவதற்கு வசதியாக சீன அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி முரளீதரன் நேற்று மக்களவையில் தெரிவித்தார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், இந்த ஆண்டு மார்ச் மாதம் புது தில்லிக்கு வந்தபோது,சீன மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயிடம் இந்தப் பிரச்னையைப் பற்றி பேசியதாகவும் தேவையைப் பொறுத்து குறைந்த எண்ணிக்கையிலான இந்திய […]
வெளிநாட்டில் மருத்துவ படிப்பை முடித்த 80 மாணவர்களுக்கு சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் பயிற்சி பெற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வெளிநாடுகளில் மருத்துவ படிப்பு படித்து முடித்த மாணவர்கள், மத்திய அரசு நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மேலும், அதன் பிறகு ஒரு ஆண்டு சொந்த மாநிலத்தின் மருத்துவமனைகளில் பயிற்சி பெற வேண்டும். அதன் பின்னரே மருத்துவர்களாக பணியாற்ற முடியும். அந்த வகையில் வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை பயின்ற 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களை பயிற்சி […]
இன்று பட்டியலின மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இன்று முதல் 14ஆம் தேதி வரை பட்டியலின மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது எம்பிபிஎஸ் பிடிஎஸ் இடங்களுக்கான 161 இடங்கள் மாநில ஒதுக்கீட்டுக்கு திரும்பியதால், இன்று முதல் 14ஆம் தேதி வரை பட்டியலின மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் நிலையில், 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் மூலம் கூடுதல் […]
மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசு, திமுக, மதிமுக, உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்நிலையில், மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினப்பிருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவப் படிப்புகளில் ஒபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு கோரிய […]
தேசிய மருத்துவக் கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலியில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்ட மனித சங்கிலி போராட்டம் இன்று நடைபெற்றது. மத்திய அரசின் புதிய தேசிய மருத்துவக் கல்வி கொள்கை கடந்த வாரம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. எம்பிபிஎஸ் முடித்தவர்கள் இறுதி ஆண்டில் நெக்ஸ்ட் எனும் மருத்துவ நுழைவுத் தேர்வினை எழுத வேண்டும் , இந்திய மருத்துவ கவுன்சில் இனி தேசிய மருத்துவ கவுன்சிலாக மாற்றப்படும் ஆகிய விதிமுறைகள் இந்த புதிய மருத்துவ கல்வி கொள்கையில் உள்ளது. […]
சென்னை அரசுக் மருத்துவ கல்லூரிகளில் பயிலும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு, மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திவருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், 556 முதுநிலை மருத்துவ காலிப் பணியிடங்கள் உள்ளன. இதனை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் அண்மையில் நிரப்பியது. இதற்கான முதல்கட்ட கலந்தாய்வுகாக தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களே அழைக்கப்பட்டதாகவும், இதனால் விதிகளை மீறி காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டிருப்பதாகவும் அரசுக் கல்லூரிகளில் பயிலும் முதுநிலை மருத்துவ […]