முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் இளம் மருத்துவர்களின் எதிர்காலத்தை நிபந்தனைகள் பாதிக்க கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 2021-22ஆம் ஆண்டுக்கான முதுநிலை மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கான 50% சேவை ஒதுக்கீட்டில் சேர்வதற்கான தகுதி குறித்த நிபந்தனை இளம் மருத்துவர்களின் உயர்கல்வி வாய்ப்பை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் 2021-22ஆம் ஆண்டுக்கான முதுநிலை மாணவர் சேர்க்கை அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அதில்,அரசு […]
டெல்லி குர்கானில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் மருத்துவ மாணவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். டெல்லி குர்கான் பகுதியில் உள்ள ஸ்ரீ குரு கோவிந்த் சிங் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஷாம்லி மாவட்டத்தை சேர்ந்த வினித் குமார் என்பவர் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு ஆயுர்வேத மருத்தும் மற்றும் அறுவை சிகிச்சை பயின்று வந்த வினித் குமாரை கொலை செய்த குற்றவாளி லக்கி என அடையாளம் காணப்பட்டுள்ளது. அதே […]
வெளிநாட்டில் பயின்ற தமிழக மாணவர்கள் மருத்துவ சேவை செய்ய கட்டணம் வசூலிப்பதை நிறுத்த தமிழக அரசு வேண்டும். வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற தமிழக மாணவர்கள், மருத்துவ சேவையைத் தொடங்க, பல இலட்ச ரூபாய் கட்டணம் வசூலிப்பதை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘வெளிநாட்டில் மருத்துவம் பயின்று பட்டம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஓராண்டு கட்டாய மருத்துவ சேவை Compulsory Rotatory Residential […]
மத்திய பிரதேசத்தில் பாலத்தின் மீது செல்ஃபி எடுக்க முயன்ற மருத்துவ மாணவி உயிரிழந்துள்ளார். மத்திய பிரதேசம் இந்தூர் பகுதியில் சிலிக்கான் நகரை சேர்ந்தவர் நேகா அர்ஸ். இவர் சாகர் மருத்துவக்கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் எம்.பி.பி.எஸ். மாணவி. இவர் இந்தூரில் உள்ள பாலத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற போது உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் இந்தூர் ராஜேந்திர நகர் காவல் நிலையத்தின் அருகில் நிகழ்ந்துள்ளது. இது குறித்து ராஜேந்திர நகர் காவல் நிலையம் தெரிவித்துள்ளதாவது: நேகா […]
ஒடிசாவில் எம்பிபிஎஸ் படிக்க வேண்டும் எனும் ஆர்வத்தில் 64 வயதுடைய ஓய்வு பெற்ற வங்கியாளர் நீட் தேர்வெழுதி மருத்துவ மாணவராக முதல் ஆண்டு சேர்ந்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜெய் கிஷோர் பிரதான் என்பவர் மக்களுக்கு சேவை செய்ய ஆசைப்பட்டு தனது 64வது வயதில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார். கேட்பதற்கு வியப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை, ஜெய் கிஷோருக்கு 64 வயதாகிறது. இவர் எஸ்பிஐ வங்கியின் ஓய்வு பெற்ற முன்னாள் அதிகாரி. இவர் ஊனமுற்றோர் இட ஒதுக்கீடு […]
நீட் தேர்வில் கலந்து கொள்ளுவோரை ஆபரணங்களை கழற்ற சொல்லுவது ஏன்? கடந்த 2017-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட, மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெறுகிறது. இந்த தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் ஆபரணங்கள் அணிய கூடாது. பர்ஸ் மற்றும் கை கடிகாரம் போன்றவற்றை உபயோகப்படுத்தக் கூடாது என கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. இந்த கட்டுப்பாடுகளால் பல்வேறு மாணவ, மாணவிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் அரவிந்த்ராஜ் என்பவர், […]
இந்தியாவில் முதன் முதலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இந்தியராக கண்டறியப்பட்ட மருத்துவ மாணவி வீடு திரும்பினார். இவர் கேரளா மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மதிலகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா வைரஸ் சீனாவை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் இந்த கொரோனா வைரசால் இதுவரை உயிரிழப்பு எண்ணிக்கை 2,118-ஆக உயர்ந்துள்ளது.முழுவதும் மொத்தம் 74,576-ஆக சற்று அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட சீனாவில் இருந்து கேரளாவை சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் இந்தியா வந்தபோது இந்தியாவில் அவருக்கு தான் […]
சினாவில் உள்ள வுஹான் நகரத்தில் முதல் முதலில் டிசம்பர் மாத இறுதியில் கண்டறியப்பட்டுள்ளது, கொரோனா வைரஸ். இதுவரை 259 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சீனா சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 259 பேர் பலியாகினர். மேலும், 11,791 பேர் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் என்று கூறியுள்ளது. இந்நிலையில், சென்னை சேர்ந்த வேலம் எனும் மாணவி, சீனாவில் உள்ள டியான்ஜின் எனும் மாகாணத்தில் மருத்துவம் […]