இந்திய கிரிக்கெட்டின் அடையாளம் சச்சின் டெண்டுல்கர்,இவர் ஆறு மாநிலங்களில் உள்ள மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 100 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிகிச்சைக்கு தேவையான நிதி உதவி செய்துள்ளார். சச்சின் கிரிக்கெட்டில் மட்டுமில்லாமல் தனது பொதுவாழ்க்கையிலும் பல குறிப்பிடக்கூடிய சிறப்பான செயல்களை செய்து வருகிறார்.சச்சின் ஏகம் என்ற அறக்கட்டளையில் முக்கிய பொறுப்பில் உள்ளார்.இதன் மூலம் அரசு மற்றும் அறக்கட்டளை மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் […]