சென்னையில் பஸ், ரயில் இயக்க கூடாது.! வயதானவர்களை பாதுகாக்க வேண்டும்.!

சென்னையில் தளர்வுகள் தரக்கூடாது என்றும் பொது போக்குவரத்துக்கு பஸ் ரயில்களை இயக்க கூடாது எனவும் மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில், ஊரடங்கை நீடிப்பதா? இல்லை தளர்வு செய்யலாமா? என்பதை குறித்து மருத்துவ நிபுணர்களுடன் இன்று காலை முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை முடிந்தபின், செய்தியாளர்களை சந்தித்து பேசிய மருத்துவ குழு பிரதிநிதியான ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் பிரதீப் கவுர், தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா அதிக பாதிப்பு … Read more

4 மாவட்டங்களை தவிர்த்து தளர்வுகளை தரலாம் – மருத்துவ நிபுணர் குழு.!

தமிழகத்தில் சென்னையில் தான் அதிக பாதிப்பு என்றும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக உள்ளது. தமிழகத்தில் பொதுமுடக்கம் நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில், மருத்துவ நிபுணர்களுடன் இன்று முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில், முதல்வருடன் ஆலோசனை கூட்டம் முடிந்தபின், தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய மருத்துவ குழு பிரதிநிதியான ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் பிரதீப் கவுர், தமிழகத்தில் சென்னையில் தான் அதிக பாதிப்பு என்றும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக உள்ளது என்று கூறியுள்ளார். இதையடுத்து, … Read more

ஊரடங்கு நீட்டிப்பு? – மருத்துவ நிபுணர்களுடன் மீண்டும் இன்று முதல்வர் ஆலோசனை

மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக்கு பின் பொதுமுடக்கம் நீட்டிப்பு பற்றி அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் பொதுமுடக்கம் நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில், மருத்துவ நிபுணர்களுடன் இன்று மீண்டும் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக்கு பின் பொதுமுடக்கம் நீட்டிப்பு பற்றி அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர்களுடன் நேற்று ஆலோசனை நடத்திய நிலையில், இன்று மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுமுடக்கம் நீடிக்கப்படலாமா? நீட்டித்தால் … Read more

ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு? மருத்துவர்களுடன் முதல்வர் மீண்டும் நாளை ஆலோசனை.!

கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் பொதுமுடக்கம் நீடிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல். தமிழகத்தில் பொது முடக்கம் தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் நாளை மீண்டும் முதல்வர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக்கு பின் பொதுமுடக்கம் நீட்டிப்பு பற்றி அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்திய நிலையில், நாளை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுமுடக்கம் நீடிக்கப்படலாமா? நீட்டித்தால் என்ன தளர்வுகள் அளிக்கலாம்? என முதல்வர் … Read more

வரும் 30-ம் தேதி முடிவு.? மருத்துவ குழுவுடன் முதல்வர் நடத்திய ஆலோசனைக்கு பின் தகவல்.!

தமிழகத்தில் பொதுமுடக்கத்தை நீடிப்பது குறித்து வருகின்ற 30 ஆம் தேதி முடிவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்வதால் இன்று காலை மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் பீலா ராஜேஷ் உட்பட உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளனர். மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு குறித்தும் ஊரடங்கு நீடிப்பதா … Read more

ஊரடங்கு நீடிப்பா.?- மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை.!

தமிழகத்தில் மே 31 ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கடந்த 3 முறையும் பொதுமுடக்கத்தை நீடிக்க மருத்துவ நிபுணர் குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்வதால் 4 வது முறையாக மருத்துவ குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் பீலா … Read more

ஊரடங்கை படிப்படியாக நீக்க வேண்டும் – மருத்துவ நிபுணர் குழு.!

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தை படிப்படியாக நீக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அமலில் உள்ள பொதுமுடக்கத்தை உடனே முழுவதும் நீக்காமல், ஊரடங்கை படிப்படியாக நீக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியிடம் மருத்துவர் நிபுணர் குழு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது குறித்து மக்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் கொரோனா பரிசோதனைகள் அதிகரிப்பதால் தான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது. பணியிடங்களில் தனிமனித … Read more

"தமிழகத்தில் முழுமையாக ஊரடங்கை தளர்த்த முடியாது" – மருத்துவ நிபுணர் குழு

தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாக தளர்த்த முடியாது என்றும் படிப்படியாக தான் தளர்த்த முடியும் எனவும் மருத்துவ நிபுணர் குழுவின் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு தினந்தோறும் அதிகரிப்பதால், தற்போது 2 ஆம் கட்ட ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலம் மே 3 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் ஊரடங்கு நீக்கப்படுமா ? என்று அனைவரது மனதிலும் கேள்வி எழுந்துள்ளது. இதனை குறித்து 3 க்கு பிறகு தான் … Read more